News
முல்லைத்தீவு பாலர் பாடசாலைக்கு தளபாடங்கள் வழங்கும் நிகழ்வு!
-ஊடகப்பிரிவு- கல்விக்கு கரம்கொடுப்போம் எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், முல்லைத்தீவு, பேராறு பாலர் பாடசாலைக்கு தளபாடங்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரத்தியேகச் செயலாளரும், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான றிப்கான் பதியுதீனினால் இந்த தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதன்போது, அமைச்சரின் இணைப்பாளர் மொஹிடீன் மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர் உட்பட பலரும் பங்கேற்றிருந்தனர்.
அமைச்சர் ரிஷாட்டின் நிதியொதுக்கீட்டில் மறிச்சுக்கட்டிக்கான உள்ளக வீதிகள் புனரமைப்பு!
-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், மன்னார் மறிச்சிக்கட்டி கிராமத்தின் உள்ளக வீதிகளின் புனரமைப்புப் பணிகள் இன்று (05) ஆரம்பிக்கப்பட்டன. அமைச்சரின் இணைப்பாளரும், பிரதேச சபை உறுப்பினருமான முஜாஹிரின் தலைமையில், 13.3 மில்லியன் ரூபாய் பெறுமதியில், உள்ளக வீதிகளுக்கான தார் இடும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!
-ஊடகப்பிரிவு- 2003 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க நுகர்வோர் விவகாரங்கள் தொடர்பான அதிகார சபை சட்டத்துக்காக முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் (விடய இல. 32) சர்வதேச நாடுகளில் நுகர்வோர் தொடர்பில் பின்பற்றப்படுகின்ற அம்சங்கள் மற்றும் காலத்தின் தேவைக்கிணங்க திருத்தப்பட வேண்டிய விடயங்கள் என்பவற்றை உள்ளடக்கி, 2003 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க நுகர்வோர் விவகாரங்கள் தொடர்பான அதிகார சபை சட்டத்தினை திருத்தம் செய்வது தொடர்பில் கைத்தொழில் மற்றும் வணிக விவகார அமைச்சர் ரிஷட் பதியூதீனினால் முன்வைக்கப்பட்ட…
‘பிரதி மேயர் தெரிவில் காலைவாரியது மு.கா’ உறுப்பினர் முபீத் குற்றச்சாட்டு!
-முபீத்- பிரதி மேயர் பதவியை அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு பெற்றுத்தருவோம் என்ற வாக்குறுதியின் கீழ் முஸ்லிம் காங்கிரஸ் மேயருக்கு ஆதரவு வழங்கினோம். எனினும் பிரதி மேயர் தெரிவில் மு.கா காலை வாரிவிட்டது என கல்முனை மாநகர சபை உறுப்பினர் முபீத் குற்றம் சாட்டினார். அவர் மேலும் கூறுகையில், நடந்து முடிந்த மாநகரசபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்த போதும், 14 உறுப்பினர்களுடன் கல்முனை மாநகரசபையில் ஆட்சியமைப்பதற்கு பல இடர்களை எதிர்நோக்கினர். இந்த…
காணியற்ற தலைமன்னார் மக்களுக்கு காணிகள் வழங்கும் நிகழ்வு!
-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியினால், காணியற்ற தலைமன்னார் மக்களுக்கு அரசாங்கத்திடமிருந்து காணிகள் பெற்றுக் கொடுக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (02) இடம்பெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரத்தியேகச் செயலாளருமான றிப்கான் பதியுதீன், மன்னார் பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எச்.எம்.முஜாஹிர், செய்யது அலி முகம்மது நயீம் மற்றும் இலங்கை சட்டஉதவி ஆணைக்குழுவினர், காணி சீர்திருத்த ஆணைக்குழுவினர் ஆகியோர் கலந்துகொண்டு இக்காணிகளுக்கான உறுதிப் பத்திரங்களை…
முல்லைத்தீவு மாவட்ட மாதர் அமைப்புக்கு உதவிய றிப்கான் பதியுதீன்!
-ஊடகப்பிரிவு- “நாட்டின் திடமான பெண்களின் தலைமைத்துவம்” எனும் தொனிப்பொருளில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், முல்லைதீவு மாவட்ட பண்டாரவன்னி மாதர் சங்கம், பனிக்கன்குளம் மாதர் சங்கம், மணவாளன் பட்டமுறிப்பு மாதர் சங்கங்களுக்கு தளபாடங்களை ( அலுமாரி மேசை கதிரை ) முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளருமான றிப்கான் பதியுதீனினால் வழங்கி வைக்கப்பட்டது.
பிரதமருக்கு ஆதரவாக வாக்களிக்க மக்கள் காங்கிரஸ் முடிவு!
-ஊடகப்பிரிவு- பிரதமருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவந்தவர்களின் நோக்கத்தை தோற்கடிக்க, பிரதமருக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீடம் முடிவு செய்துள்ளது. இன்று இரவு (03)கொழும்பில் கூடிய கட்சியின் உயர்பீடம், சுமார் 4 மணி நேரம் இது தொடர்பில் ஆராய்ந்த பின்னர், இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டது. இதற்கு முன்னதாக இன்று மாலை பிரதமருடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி நீண்ட நேர பேச்சுவார்த்தை நடத்திய போது, சிறுபான்மை மக்கள் அண்மைக் காலமாக எதிர்நோக்கி வரும்…
05ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு இஷாக் எம்.பி சான்றிதழ்களை வழங்கி கெளரவித்தார்!
-ஊடகப்பிரிவு- கல்வி அபிவிருத்தி போரம் (EDF) இன் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கெளரவித்து சான்றிதழ் மற்றும் நினைவுச்சின்னம் வழங்கும் 14 ஆவது நிகழ்ச்சித்திட்டம் அனுராதபுரம் “யொவுன் நிக்கத்தனய” கேட்போர் கூடத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் பங்கேற்புடன் (01) நடைபெற்றது. EDF இன் தலைவர் எஸ்.எல்.மன்சூரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அனுராதபுரம், புத்தளம், குருநாகல், வவுனியா, கிளிநொச்சி, மன்னார் ஆகிய 6 மாவட்டங்களில் இருந்து 2017 ஆம் ஆண்டில்…
“இளைஞர்களே நாட்டின் எதிர்காலம்” இஷாக் எம்.பி!
-ஊடகப்பிரிவு- எமது நாட்டை எதிர்காலத்தில் வளமானதாக கட்டியெழுப்பும் பொறுப்பும், கடமையும், திறமையும் இன்றைய இளைஞர்களிடமே தங்கியிருக்கின்றது. ஆகவே அவர்களது தேவைப்பாடுகள் தொடர்பில் அரசு அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் தெரிவித்தார். நிக்கவரெட்டியவில் நடைபெற்ற “யொவுன்புர” நிகழ்ச்சித்திட்டத்தில், அனுராதபுரத்திலிருந்து சென்று பங்கு பற்றியிருந்த இளைஞர்கள் முன்னிலையில் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார் தொடர்ந்தும் அவர் அங்கு உரையாற்றுகையில், தனது பிரதேசமான அனுராதபுர மாவட்ட இளைஞர்கள்…
மின் விளக்குகள் பொருத்தும் நிகழ்வு!
-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளருமான றிப்கான் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், மன்னார் பிரதேச சபை உறுப்பினரும், அமைச்சரின் இனைப்பாளருமான முஜாஹிரின் உதவியினாலும் தாராபுரம் துருக்கி சிட்டி கிராமத்திற்கான மின் விளக்குகள் கிராமத்து இளைஞர்களால் பொருத்தப்பட்டது.
ஹரீஸின் தமிழர் எதிர்ப்பு பூச்சாண்டி அரசியலும், வெளுத்துப்போன சாயமும்!
– அஹமட் – தனது பதவியையும் அரசியல் இருப்பையும் தக்க வைத்துக் கொள்வதற்காக, மு.காங்கிரஸ் பிரதித் தலைவரும் பிரதியமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ்; முஸ்லிம் சமூகத்தை விலைபேசுவதற்கும் தயங்க மாட்டார் என்பதை, கல்முனை மாநகர சபைக்கான பிரதி மேயர் தெரிவின் மூலம் விளங்கிக் கொள்ள முடிகிறது. வடக்கு – கிழக்கு இணைப்புக்கு எதிராகவும், கல்முனை மாநரக சபை பிரிபடக் கூடாது என்றும், கல்முனை பிரதேச செயலகம் பிரிபடக் கூடாது எனவும் கோசமிட்டு வருகின்ற பிரதியமைச்சர் ஹரீஸ், அவ்வாறு நிகழ்ந்தால்…
“ஐ.தே.க வுக்கு பாடம் படிப்பிப்போம் என மு.கா தலைவர் அண்மைக்காலமாக வீறாப்பு பேசுவது அவரது வழமையான நடிப்பு” முபாரக் அப்துல் மஜீத்!
-முபாரக் அப்துல் மஜீத்- ஐக்கிய தேசிய கட்சிக்கு பாடம் படிப்பிப்போம் என் ரஊப் ஹக்கீம் அண்மைக்காலமாக வீறாப்பு பேசுவது அவரது வழமையான நடிப்பு என்பதுடன் முஸ்லிம்களை தொடர்ந்தும் உசுப்பேற்றி சொந்த பிழைப்பு நடத்தும் நடவடிக்கையாகும் என உலமா கட்சி தெரிவித்துள்ளது. இது பற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்ததாவது, ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரசின் வரலாற்றை பார்க்கும் போது அவர் எப்போதும் ஐ.தே.கவின் செல்லப்பிள்ளையாகவே இருந்து வருகிறார் என்பது சகலரும் அறிந்த விடயம்….
