News
கெக்கிராவ, கொல்லங்குட்டி காணிப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு!
அனுராதபுரம், கெக்கிராவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொல்லங்குட்டி பகுதியில் நிலவும் காணிப்பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்கும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் மற்றும் வன வள பாதுகாப்பு திணைக்களத்தின் அனுராதபுர மாவட்ட உயர் அதிகாரிகள் ஆகியோர் குறித்த இடத்திற்கு இன்று (07) நேரடியாக விஜயம் செய்தனர். இஷாக் எம்.பி மற்றும் உயரதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர், கொல்லங்குட்டி பிரதேச மக்களுடன் இந்தப் பிரச்சினைகள் சம்மந்தமாக கலந்துரையாடியதுடன், இப்பிரச்சினைகளுக்கான தீர்வுகள் மிக வேகமாக…
சம்மாந்துறையில் விஷேட தேவையுடைய மாணவர்களுக்கான கட்டிட அடிக்கல் நடும் நிகழ்வு!
சம்மாந்துறையில் விஷேட தேவையுடைய மாணவர்களுக்கான வகுப்பறைக் கட்டிடத்துக்கு அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று முன்தினம் (05) அல் அர்ஷத் வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில், பிரதம அதிதியாக கலந்துகொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம். நௌஷாட் கட்டிடத்துக்கான அடிக்கல்லினை நட்டி வைத்தார். இக்கட்டிடமானது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் மஜீட் அவர்களின் நினைவாக, அவரின் பிள்ளைகளினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.. சம்மாந்துறையில் சுமார் 67 இற்கும் மேற்பட்ட…
அமைச்சர் ரிஷாட்டின் நிதியொதுக்கீட்டில் மீனவக்குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த, மீன்பிடித் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்ட 534 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு நேற்று (06) மன்னார், காட்டாஸ்பத்திரி மைதானத்தில் இடம்பெற்றது. மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டதுடன், வடமாகாண சபை உறுப்பினர் அலிகான் ஷரீப், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் ரிப்கான் பதியுதீன்,…
அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியினால் கிண்ணியா ஜாயா வித்தியாலயத்துக்கு தளபாடங்கள் கையளிப்பு!
கிண்ணியா, T/K/T.B. ஜாயா வித்தியாலயத்த்துக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தளபாடங்களை வழங்கி வைத்தார். பாடசாலையின் கோரிக்கைக்கிணங்க, இன்று காலை (06) பாடசாலை அதிபர் முஸம்மிலிடம், தளபாடங்கள் கையளிக்கப்பட்டது. அத்துடன், பாடசாலையின் அபிவிருத்தி விடயங்கள் மற்றும் கல்விச் செயற்பாடுகள் தொடர்பில் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் ஆகியோருடனும் அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி கலந்துரையாடினார். (ன)
காக்காதீவு குர்ஆன் மத்ரஸாவின் பரிசளிப்பு விழா!
கொழும்பு 15 காக்கா தீவு பிரதேசத்தில் உள்ள குர்ஆன் மத்ரஸாவின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று (05) இடம்பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளரும், மேல்மாகாண சபை உறுப்பினருமான முஹம்மட் பாயிஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், மத்ரஸா நிருவாகத்தினர், ஆலிம்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலரும். பங்கேற்றிருந்தனர். (ன)
விருதோடை கிராமசேவகர் காரியாலயத்திற்கு பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக் நிதியுதவி!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக் வியாழக்கிழமை அன்று விருதோடை கிராம சேவகர் அலுவலகத்திற்கு விஜயம் செய்திருந்தார். அதன்போது அங்குள்ள அலுவலகம் குறைபாடுகளுடன் காணப்பட்டதுடன், மக்கள் பாவனைகளின் போது அசௌகரியங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்களை அதிகமாகக்கொண்டதாகவும் காணப்பட்டது. இதனை அவதானித்து உடனே கிராம சேவகருடன் கலந்துரையாடி, தனது சொந்த நிதியில் கடந்த வெள்ளிக்கிழமை (03) அக்குறைபாடுகளை மக்களின் நலன் கருதி நிவர்த்தி செய்து கொடுத்தார். அத்தோடு “எதிர்வரும் நாட்களில் புதிய கிராம சேவகர்…
முஸ்லிம்களின் நில கபளீகரப் படலம் நல்லாட்சியிலும் தீவிரமா? ? ?
புத்தளம் உப்பளங்களை அரசு அபகரிப்பதை அ.இ.ம.காங்கிரஸ் வன்மையாக எதிர்க்கின்றது. இந்த நில அபகரிப்பையெதிர்து 31/07/2028 ல் புத்தளத்தில் நடந்த மக்கள் எழுச்சிப் போராட்டத்தை ஆதரிக்கின்றோம். உரிமைகள் சாய்ந்தால் உடமைகள் மாயும். உரிமைக்குக் குரல் கொடுப்போம் வறுமைக்கு விடை கொடுப்போம். ” நிலம் ” என்பது மனித வாழ்வின் உயிரோடும் உரிமையோடும் பின்னிப் பிணைந்துள்ளது. “நில” உரிமைப் போராட்டமே உலகின் போராட்டம் களுக்குக் காரணமாயுள்ளது. ” நிலம் ” என்பது உங்களுடைய மூதாதையரால் உங்களுக்கு வழங்கப்பட்டதல்ல ; மாறாக…
மக்கள் காங்கிரஸின் அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசல் வட்டாரத்துக்கான மத்திய குழுத் தெரிவு!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசல் வட்டாரத்திற்கான மத்திய குழு தெரிவு அறிவித்தல் வழங்கப்பட்டதன் படி கடந்த வெள்ளிக்கிழமை (03-08-2018) பி.ப 7.00 மணியளவில் மஃரிப் தொழுகையை தொடர்ந்து மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வு அக்கரைப்பற்று பட்டின பள்ளி வீதியில் அமைந்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்11ம் வட்டார செயற்பாட்டுக் காரியாலயத்தில் அதன் முதற்செயற்பாட்டு நிகழ்வாக இடம் பெற்றது. அக்கரைப்பற்று ஜும்மா பெரிய பள்ளிவாசல் வட்டாரத்திற்கான 2018 நடப்பு வருட உத்தியோகத்தர் தெரிவும் இங்கு…
க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு பிரதி அமைச்சர் அமீர் அலியின் வாழ்த்துச் செய்தி!
க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றும் அனைத்து மாவணவர்களும் சிறந்த பெறுபேற்றை பெற்று, தத்தமது பிரதேசத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று தாம் பிரார்த்திப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், கடற்தொழில் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். நாளை திங்கள் கிழமை (06 ஆரம்பமாகும் கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து விடுத்துள்ள வாழ்த்து செய்தியிலேயே அவர் மேற் சொன்னவாறு தெரிவித்துள்ளார். அச் செய்தியில்…
“வடக்கு, கிழக்கு மக்களுக்கு வீடுகளை வழங்குவதில் விஷேட கவனம் தேவை” மன்னாரில் அமைச்சர் சஜித்திடம், அமைச்சர் ரிஷாட் கோரிக்கை!
யுத்தத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாகி நிற்கும் வடக்கு, கிழக்கு மக்களுக்கு வீடுகள் வழங்குவதில் தேசிய வீடமைப்பு அதிகார சபை விஷேட கவனஞ்செலுத்த வேண்டுமேன அமைச்சர் சஜித் பிரேமதாசவிடம், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சினால் “2017 கம் உதாவ செமட்ட செவன” வீடமைப்புத் திட்டத்தின் கீழ் மன்னார், நறுவிலிக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள “லூர்து நகர்” வீடமைப்புத் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் இன்று (05) அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உரையாற்றினார். அமைச்சர் சஜித் பிரேமதாச…
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு பிரதியமைச்சரின் வாழ்த்துச் செய்தி!
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்கள் சிறந்த பெறுபேற்றை பெற வாழ்த்துவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், கடற்தொழில் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். நாளை ஞாயிற்றுக்கிழமை (05) நடைபெறும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து விடுத்துள்ள வாழ்த்து செய்தியிலேயே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்துள்ளார். அச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நாளை நடைபெறும் தரம் ஐந்து புலமைப் பரிசில்…
“சிறுபான்மை சமூகத்தின் நம்பிக்கை வீணாகிவிடக் கூடாது” பொலன்னறுவையில் ஜனாதிபதி முன்னிலையில் அமைச்சர் ரிஷாட் எடுத்துரைப்பு!
“புத்தெழுச்சிபெறும் பொலன்னறுவை” அபிவிருத்தியில் சிறுபான்மை சமூகங்களும் உள்வாங்கப்பட்டமையானது, ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நன்றிக்கடன் மற்றும் விசுவாசத்தை வெளிப்படுத்தியிருப்பதாக கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பொலன்னறுவை, தம்பாளை, ஹிலால்புரத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஜும்ஆ பள்ளிவாசலை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு, நேற்று மாலை (03) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டு, நினைவுக் கல்லுக்கான திரையையும் திரை நீக்கம் செய்து வைத்தார். பிரதியமைச்சர் காதர்…
