News
அரசு என்னை கொலை செய்ய முயற்சி: மைத்திரி
தமக்குள்ள பாதுகாப்பை அகற்றி விட்டு அரசு என்னை கொலை செய்யவே முயற்சிக்கிறது என எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கலகமுவையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் பேசுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி வேட்பாளர் என்ற வகையில் தனக்கான பாதுகாப்பிற்கு 7 பாதுகாப்பாளர்கள் வழங்கப்பட்டுள்ளனர். ஆனால் மகிந்த ராஜபக் ஷவிற்கு எந்தளவு பாதுகாப்பு உள்ளது என்பதை மக்கள் அறிந்துள்ளனர். எனினும் மக்களின் ஆதரவு பாதுகாப்பும் எனக்கிருப்பதால் நான் எவ்வித அச்சமும் கொள்ளவில்லை….
மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதி மாளிகைகளை நிர்மாணிக்க பெருமளவு பணத்தை செலவிட்டுள்ளார் – மைத்திரிபால சிறிசேன
மக்களின் துயரங்களை அறிந்த தலைவன் என்ற வகையில் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உறுதி வழங்கியுள்ளார்.நேற்று நடைபெற்ற கூட்டமொன்றின் போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கண்டி திகண பகுதியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சியின் பிரதிநிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். அங்கு உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, ஜனாதிபதி மாளிகைகளை நிர்மாணிக்க…
மக்களைப் பற்றி சிந்தித்தே நாம் அரசாங்கத்திலிருந்து வெளியேறினோம்
ஏன் ஜக்கிய தேசிய கட்சிக்கு நானும் அல்லது நவீன் திசாநாயக்க உட்பட மற்றவர்களும் வந்தார்கள் என்பது பலருக்கும் புரியாமல் உள்ளது.அதற்கு காரணம் இந்த நாட்டில் நடக்கும் அநீதிகளை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது.நாங்கள் நினைத்திருந்தால் அரசாங்கத்தின் வரப்பிரசாதங்களை அனுபவித்துக் கொண்டு அங்கிருந்திருக்கலாம். ஆனால் மக்களை பற்றி சிந்தித்ததன் காரணமாகவே அரசாங்கத்தைவிட்டு வெளியில் வந்தோம் என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பீ. இராஜதுரை தெரிவித்துள்ளார். நுவரெலியா மாநகர சபையின் புதிய நகர மண்டபத்தில் நடைபெற்ற பொது வேட்பாளரை…
பிரதான நீர்த்தேக்கங்கள் சிலவற்றின் வான்கதவுகள் திறப்பு
கடும் மழையை அடுத்து பிரதான நீர்த்தேக்கங்கள் சிலவற்றின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.விக்டோரியா, ரன்தெனிகல மற்றும் ரன்டெம்பே அகிய நீர்த்தேக்கங்களில் தலா இரண்டு வான் கதவுகள் வீதம் திறக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட இடர் முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எஸ்.எச்.முதித்த மஞ்சுல கூறியுள்ளார்.இதனால் குறித்த நீர்த்தேக்கங்களை அண்மித்த பகுதிகளில் மகாவலி கங்கையை பயன்படுத்துவோர் விழிப்புடன் இருக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார். மழைக் காரணமாக மகாவலி திட்டத்திற்குரிய கண்டலம, கலாவாவி, நாச்சாதீவு, இராஜாங்கனை, நுவரவாவி, திசாவாவி, உல்ஹிட்டிய மற்றும்…
நவநீதம்பிள்ளையிடம் குவிந்த 15,000 கடிதங்கள்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் முன்னாள் ஆணையர் நவநீதம்பிள்ளைக்கு போர்க்குற்றச் செயல்கள் தொடர்பாக 15,000 கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. போர்க்குற்றச் செயல்கள் மற்றும் காணாமல் போனது தொடர்பாக சாட்சியங்கள் அடங்கிய கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கடத்தப்பட்ட காணாமல் போனவர்களின் மற்றும் உயிரிழந்த பெற்றோர் அமைப்பு இந்த கடிதங்களை அனுப்பி வைத்துள்ளது. நவநீதம்பிள்ளையினால் நியமிக்கப்பட்ட போர்க்குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைக் குழுவினர் இந்த கடிதங்களை பரிசீலனை செய்து விசாரிப்பார்கள் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று…
சவுதியில் இலங்கை பெண் தற்கொலை
சவுதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில் புரிந்து வந்த இலங்கை பெண்ணொருவர் அவர் பணியாற்றிய வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.இந்த பெண் வீட்டில் உள்ள குளியலறையில் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதுடன் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குளியலறை கதவு நீண்ட நேரம் திறக்கப்படாததால், வீட்டு எஜமான் கதவை தட்டியுள்ளார். உள்ளே இருந்து பதில் எதுவும் கிடைக்காத நிலையில், அவர் கதவை உடைத்து திறந்த போது பெண் இறந்து கிடந்துள்ளார்….
யாழ்ப்பாண முஸ்லீம்கள் சகல விடயங்களிலும் பின்தள்ளப்பட்டுள்ளனர் – ரிப்கான் பதியூதின்
யாழ் முஸ்லீம்கள் அனைத்து விடயங்களிலும் பின்தள்ளப்பட்டுள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியூதின் தெரிவித்துள்ளார். நேற்று 19-12-2014 மாகாண சபையில் நடைபெற்ற வரவு செலவு திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். கடந்த சில தினங்களிற்கு முன்னர் அம்மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டனர்.ஆனால் இது வரை பொறுப்பு வாய்ந்தவர்கள் இதுவரை சென்று பார்க்கவில்லை.எனவே இனி வரும் காலங்களில் அவர்களை எம்மக்களாக சென்று பார்வையிட வேண்டும்.அவர்களிற்கு உதவ வேண்டும்.அனைத்து விடயங்களிலும் உள்வாங்க வேண்டும்….
நாமல் ராஜபக்ஷ உப ஜனாதிபதி போல் செயற்படுகிறார் : ஹிருணிகா
ஜனாதிபதியின் புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ உப ஜனாதிபதி போன்று செயற்படுவ தாக குற்றம் சாட்டியுள்ள மேல்மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர அமைச்சர்கள் பலர் அவரை “சேர்” என அழைத்த சந்தர்ப்பங்களும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது சமூக வலைத்தளங்களை பார்க்கும் போது இளைஞர், யுவதிகள் அரசியல் ரீதியாக தெளிவான நிலையில் இருக்கின்றார்கள் என்பது வெளிப்படையாகின்றது. கடந்த…
ஷிராணி பண்டாரநாயக்க மீண்டும் பிரதம நீதியரசராக நியமிக்கப்படுவார்: மைத்திரிபால
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதும் முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவை மீண்டும் அந்த பதவியில் நியமிக்க போவதாக பொது வேட்பளார் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அத்துடன் 2010 ஆம் ஆண்டு பொது வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு நியாயத்தை நிறைவேற்ற போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.முன்னாள் பிரதம நீதியரசரும், முன்னாள் இராணுவத் தளபதியும் அரசியல்…
நான் எவ்வாறு இஸ்லாத்தை ஏற்றேன்: பிரபல பாடகி ரிச்சி
ஜுனைட் எம்.பஹ்த் அமெரிக்காவை சார்ந்த நிக்கோலா ரிச்சி என்ற பிரபல பாடகி, இஸ்லாத்தை பற்றி ஆராய ஆரம்பித்தார். இஸ்லாம் அன்பின் மார்க்கமாக, அமைதியின் மார்க்கமாக, உண்மையின் மார்க்கமாக இருப்பதை அவர் தனது ஆய்வின் போது உணர்கிறார். இந்த மார்க்கத்தை பற்றிய உண்மைகளை மறைத்து அந்த மார்க்கத்தில் மீடியாக்கள் தவறாக சித்திரிப்பதை நினைத்து கவலை கொள்கிறார். தாம் இஸ்லாத்தை ஆராய்ந்ததாகவும் அது உண்மை என்பதை அறிந்து கொண்டதாகவும் அதனால் அந்த மார்க்கத்தில் தன்னை இணைத்து கொள்ள போவதாகவும் தனது குடும்பத்திடம்…
அம்பாறை மாவட்டத்தில் பெருவெள்ளம்: ஆயிரக் கணக்கான வீடுகள் நீரில் மூழ்கின
பி. முஹாஜிரின் அம்பாறை மாவட்டத்தில் மூன்று நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக தாழ்ந்த பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதோடு ஆயிரக் கணக்கான வீடுகளும் நீரில் மூழ்கியுள்ளன. மக்களின் இயல்பு வாழ்கையும் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பொத்துவில், திருக்கோவில், லகுகல, பானாமை, அம்பாறை, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில். நிந்தவூர், சம்மாந்துறை, காரைதீவு, கல்முனை, நட்பிட்டிமுனை, நாவிதன்வெளி, மருதமுனை ஆகிய பிரதேசங்களில் மக்களின் குடியிருப்பு வீடுகள் பல நீரில் மூழ்கியுள்ளதாலும் வீடுகளுக்குள் நீர் புகுந்துள்ளதாலும் மக்கள் பெரும்…
புத்தளம் மாவட்டத்தின் பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன
இர்ஷாத் றஹ்மத்துல்லா தற்போது பெய்துவரும் மழையினை அடுத்து புத்தளம் மாவட்டத்தில் புத்தளம், கருவலகஸ்வௌ, நவகத்தேகம மற்றும் முந்தல் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் இந்த மழையினையடுத்து தாள் நிலப்பகுதிகளே அதிகமான இந்த பாதிப்புக்களை எதிர் கொண்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் புத்தளம் மாவட்ட இணைப்பு அதிகாரி கேர்ணல் பத்மசிறி தலுவத்த கூறினார். அதே வேளை புத்தளம் மாவட்டத்தில் நவகத்தேகம…
