ACMC News
முருங்கன், சிலாவத்துறை பிரதேச வைத்தியசாலைகளுக்கான விஜயம்!
மன்னார் மாவட்டத்தின் முருங்கன் மற்றும் சிலாவத்துறை பிரதேச வைத்தியசாலைகளுக்கு வியாழக்கிழமை (16) விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், வைத்தியசாலைகளுக்கு தேவையான சில அத்தியாவசியப் பொருட்களையும் கையளித்தார். இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் முத்து முஹம்மட், கட்சியின் உயர்பீட உறுப்பினர் Dr.மிக்றா மற்றும் Dr. ஒஸ்மன், Dr. கியாஸ், கட்சியின் முக்கியஸ்தர்களானா பைறூஸ், சாஹிர், ஞானராஜ், சந்திரிக்கா, ராபி மௌலவி, ஜௌசி, ஹலீம் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
“சமூக சிந்தனையும் தற்றுணிவும்கொண்ட கல்விமான் சியானின் இழப்பு ஈடு செய்ய முடியாதது”
– அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்! சமூக சிந்தனையும் தற்றுணிவும்கொண்ட ஒரு கல்விமானை எமது சமூகம் இழந்து நிற்கின்றது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரவித்துள்ளார். முன்னாள் மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளரும் நாடறிந்த கல்விமானுமாகிய எம்.எம்.சியான் அவர்களின் மறைவு தொடர்பில், அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “கல்வியையே தன்னுடைய வாழ்க்கையாகக்கொண்ட மர்ஹூம் எம்.எம்.சியான் அவர்கள், மன்னார், தாராபுரத்தை…
ஏறாவூர் லிட்டில் வொண்டர் முன்பள்ளியின் பரிசளிப்பு விழா!
ஏறாவூர், ஐயன்கேணி லிட்டில் வொண்டர் முன்பள்ளியின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் மாணவர்களின் விடுகை நிகழ்வும் ஞாயிற்றுக்கிழமை (12) ஏறாவூர் மட்/மம/ அல் ஜுப்ரியா பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சருமான M.S.சுபைர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறார்களை வாழ்த்தி பரிசில்களையும் வழங்கிவைத்தார்.
கிண்ணியா சாஹிரா முன்பள்ளியின் பரிசளிப்பு விழா!
கிண்ணியா பிரதேச சபைக்குட்பட்ட, ஆயிலியடி சாஹிரா முன்பள்ளியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும் கிண்ணியா நகரசபையின் முன்னாள் மேயருமான Dr.ஹில்மி மஹ்ரூப் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
‘கல்வியியலாளர் சியானின் இழப்பு கல்விச் சமூகத்துக்கு பேரிழப்பாகும்’
பாராளுமன்ற உறுப்பினர் முத்து முஹம்மட் அனுதாபம்! முன்னாள் மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் சியானின் மறைவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் முத்து முஹம்மட் அனுதாபம் தெரிவித்துள்ளார். அவர் தனது அறிக்கையில், “காலம் சென்ற கல்விமான் முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர் சியான் அவர்களின் மறைவு கல்வி உலகிற்கு பேரிழப்பாகும். புத்தளம், மன்னார் கல்வி வலயங்களில் பணியாற்றி பலரது வளர்ச்சிக்கு தூணாகவும் துணையாகவும் இருந்தவர். இவரது இழப்பால் துயரும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவிப்பதுடன், அவரது பாவங்கள்…
களுத்துறை அஹதியா பாடசாலை வருடாந்த பரிசளிப்பு விழா!
களுத்துறை அஹதியா பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா, செவ்வாய்க்கிழமை (14) காலை, களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் இடம்பெற்றது. அஹதியா பாடசாலையின் அதிபர் அல்ஹாஜ் சிராப் முபஸ்சிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தார். இதன்போது, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தவிசாளர் உவைஸ் முஹம்மட், ஹைதராபாத் KIMS வைத்தியசாலையின் பொதுமுகாமையாளர் சுனில் தெஹ்ரி, களுத்துறை நகரசபையின் முன்னாள் தவிசாளர் ஆமிர் நாசிர், களுத்துறை உதவி…
அப்துல்லா மஹ்மூத் ஆலிமின் மறைவுக்கு தலைவர் ரிஷாட் அனுதாபம்!
இலங்கையின் மூத்த உலமாவும் புத்தளம் காசிமியா அரபுக் கல்லூரியின் முன்னாள் அதிபருமான அப்துல்லா மஹ்மூத் ஆலிம் அவர்களின் மறைவு, ஆன்மீகத் துறையில் பெரும் இடைவெளியினை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அன்னாரின் உயர் சுவன வாழ்வுக்காக பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார். மர்ஹூம் அப்துல்லா மஹ்மூத் ஆலிம் அவர்களின் மறைவு தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “ஆன்மீக சமூகத்தை உருவாக்குவதற்காக அப்துல்லா…
மக்கள் காங்கிரஸ் தவிசாளரின் தைப்பொங்கல் வாழ்த்துக்கள்!
இன்றைய தினம் தைப்பொங்கள் பண்டிகையை கொண்டாடும் மரியாதைக்குரிய தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய தைபொங்கல் நல்வாழ்த்துக்கள்..!
Video-‘குமார வெல்கம நேர்மையான, தைரியமான ஒரு அரசியல்வாதி’
மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம நேர்மையான, தைரியமான ஒரு அரசியல்வாதி – தலைவர் ரிஷாட்! மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம நேர்மையான, தைரியமான ஒரு அரசியல்வாதி என்றும் கோட்டா மக்கள் சேவைக்கு பொருத்தமற்றவர் என அவர்தான், ஆரம்பத்திலேயே அடையாளங்கண்டவர் எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இன்றைய தினம் (10) நாடாளுமன்றத்தில், மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான, அனுதாபப் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டது….
VIDEO- மியன்மார் அகதிகள் விடயத்தில் சர்வதேச சட்டங்களை மதித்து நடவுங்கள்’
– மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் சபையில் கோரிக்கை! சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளித்து, மியன்மார் ரோஹிங்கிய அகதிகள் விவகாரத்தில், மனிதாபிமான ரீதியில் செயற்படுமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் உயர் சபையில் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடாளுமன்றில் இன்றையதினம் (09) உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, “நாட்டு மக்கள் பாரிய எதிர்பார்ப்புடன் இந்த அரசாங்கத்தை கொண்டுவந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டியது அரசின் பொறுப்பாகும். 75 வருடங்களாக, பாரம்பரிய கட்சிகள் செய்த…
புஹாரி பாலர் பாடசாலை பரிசளிப்பு விழா!
பிரதம அதிதியாக Dr.ஹில்மி மஹ்ரூப் பங்கேற்பு! முள்ளிப்பொத்தானை, புஹாரி பாலர் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா, மிகச் சிறப்பாக இடம்பெற்றது. பிரதம ஆசிரியை சவ்ஜானா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் கிண்ணியா நகர சபையின் முன்னாள் மேயருமான Dr.ஹில்மி மஹ்ரூப் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, விழாவினை சிறப்பித்திருந்தார்.
