Headlines

ad34@hFacMC

இப்போதுதான் அமெரிக்காவின் தலைமை இந்த உலகிற்கு தேவைப்படுகிறது – ஒபாமா

தங்களுக்கு சீனாவோ, ரஷ்யாவோ போட்டியே அல்ல என அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். நியூயார்க் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், வேறு எப்போதும் விட இப்போது தான் அமெரிக்காவின் தலைமை இந்த உலகிற்கு தேவைப்படுகிறது. நமக்கு சீனாவோ அல்லது ரஷ்யாவோ ஒரு போட்டியாளர்களே அல்ல என்று தெரிவித்துள்ளார்.

Read More

றப்பர் மரங்களில் நோய் எதிர்ப்பு சக்தியா? ஆராய்ச்சிகளுக்காக அமேசான் காட்டுப் பகுதிக்கு சர்வதேச இறப்பர் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி சபையினர் விரைவு!

றப்பருக்கு ஒன்பது இனங்கள் உள்ளன. இங்கே நாம் ஒரு இனத்தோடு மட்டும் செயற்படுகின்றோம். றப்பர் ஆராய்ச்சி நிறுவனங்கள் இது தொடர்பான ஆராச்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது நாம் ஏனைய எட்டு இனங்களை சேகரிக்க பெருவியன் நாட்டு அரசின் அனுமதியுடன் அமேசான் காட்டுப் பகுதிக்கு போகவுள்ளோம். இலங்கையில் முதல் முறையாக அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள உலக றப்பர் மாநாட்டின்; அங்குரார்பண நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே சர்வதேச இறப்பர் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி சபையின் பொது செயலாளர் டாக்டர் அப்துல்…

Read More

கொழும்பு மாநகர ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிரதிநிதிகளின் மாநாடு இன்று!

கொழும்பு மாநகர சபைக்குட்ட பகுதிகளின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிரதிநிதிகளின் மாநாடு இன்று 30ஆம் திகதி பிற்பகல் 1.30 மணிக்கு நாரஹேண்பிட்டிய அபயராம விகாரையில் நடைபெறுகிறது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டுக்கு, அமைச்சர்கள் தொகுதி அமைப்பாளர் உட்பட சுமார் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துக் கொள்ளவுள்ளனர். இந்த மாநாட்டை முன்னிட்டு கொழும்பு கிழக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளரினால் நடைபவணி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Read More

ஐஸ்வாளி குளியல் நிதி உதவி 100 பில்லியன் டாலரை கடந்தது

லூ கெரிக்ஸ் என்ற நரம்பு சம்பந்தப்பட்ட நோய்க்கு நிதி திரட்டித் தரும்விதமாக கடந்த மாதம் அமெரிக்காவில் தொடங்கிய ஐஸ் வாளிக் குளியல் என்ற சவால் நிகழ்ச்சி இதுவரை 100 மில்லியன் டாலர் நிதி உதவியினைக் கடந்துள்ளது. இந்த நோய் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் விதமாக கடந்த மாதம் 29ஆம் தேதி துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இந்த மாதம் 29ஆம் தேதி முடிய நன்கொடையாக இந்த நிதியினைத் திரட்டியுள்ளது என்று அதன் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு இதே…

Read More

இலங்கை றப்பர் தொழில் துறை மூலம் மூன்று பில்லியன் அமெரிக்க டொலரை ஈட்டவுள்ளத

அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனை தொலைநோக்கு என்ற கொள்கையின் கீழ், எமது அரசாங்கம் எதிர்வரும் ஆண்டுகளில் றப்பர் தொழில் துறை மூலம் மூன்று பில்லியன் அமெரிக்க டொலரை ஈட்டிக்ககொள்வதற்கான ஒர் இலட்சியத்தில் உள்ளது. ஒரு சாத்தியமான முறையில் மூன்று பில்லியன் அமெரிக்க டொலரை ஈட்டிக்ககொள்வதெனில் எமது சிறிய றப்பர் தொழில் சார் விவசாயிகளுக்கு ஆதரவு வழங்கப்படுதல் அவசியமாகும். இலங்கையில் முதல் முறையாக அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள உலக றப்பர் மாநாட்டின்; அங்குரார்பண நிகழ்வில் கலந்துக்கொண்டு…

Read More

விமான சேவையை சரிவர செய்யாததில் ஏர் இந்தியா விமானம் முதலிடத்தில் உள்ளது!

இந்தியாவில் விமான சேவையை சரிவர செய்யாத விமானங்களின் பட்டியலில் ஏர் இந்தியா விமானம் முதலிடத்தில் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பயணிகளின் புகார் பட்டியலில் சேவை சரியில்லை என்கிற குற்றச்சாட்டில் ஏர் இந்தியா விமானம் முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில் ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் சேவை சரியில்லை என்று அந்த விமான நிறுவனம் இரண்டாவது இடத்தில் உள்ளது. விமானம் சரியான நேரத்துக்கு புறப்படவில்லை, முன் அறிவிப்பு எதுவும் இல்லை, விமானம் ரத்து என்பது அடிக்கடி நிகழும் நிலை என்று…

Read More

இலங்கையின் ஆதரவை எதிர்பார்க்கும் ஸ்பெயின்!

இந்தோனேசியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்பெயின் வெளிவிவகார அமைச்சர் ஜோஸ் மொனுவல் கார்சியா மார்க்லோ, ஐ.நா பாதுகாப்புச் சபை ஆசனத்திற்காக இலங்கை ஆதரவை திரட்ட இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். ஸ்பெயின் வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயத்தை உறுதிப்படுத்தியுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சு, ஜோஸ் மொனுவல் கார்சியா மார்க்லோ அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளதாக தெரிவித்துள்ளது. எதிர்வரும் 3 ஆம் திகதி அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் ஸ்பெயின் வெளிவிவகார அமைச்சர், நாடு திரும்பும் முன்னர், எதிர்வரும் 7 ஆம் திகதி…

Read More

நமது வெளியுறவுக் கொள்கை நீதியை அடிப்படையாகக் கொண்டது:ISIS ஐ சாடிய மலேசியப் பிரதமர்

மலேசியப் பிரதமரான நஜீப் ரஷாக் இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் தமது நாட்டின் வெளியுறவுக் கொள்கை எப்போதும் எல்லாத் துறையிலும் நீதியைப் பக்க பலமாகக் கொண்டே இருக்கும் என வலியுறுத்தியுள்ளார். இக்காரணத்தினாலே தான் சமீபத்தில் காஸாவுக்குச் சென்றிருந்த நஜீப் ரஷாக் அங்கு இஸ்ரேலின் தாக்குதலால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவி அளிப்பது தவிர பாலஸ்தீனத்தின் PLO மற்றும் ஹமாஸ் ஆகிய பிரிவுகளுக்கு இடையே ஒற்றுமையையும் இணக்கத்தையும் வலியுறுத்தியதையும் முக்கியமாக மேற்கொண்டிருந்தார் என்று கூறப்படுகின்றது. நஜீப் ரஷாக்…

Read More

ஆஸியில் இலங்கைப் பெண்ணொருவர் மரணம்

கடந்த செவ்வாய்க்கிழமையன்று இரவு அமேஷா ராஜபக்ச என்ற பெண், கடைக்கு பொருட்களை வாங்க சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் அவருடைய சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். சந்தேகம் இருக்குமானால் பிரேத பரிசோதனையை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிங்களவரான அமேஷா ராஜபக்ச 2009ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளார். இதேவேளை ஒருவாரத்துக்கு முன்னர் குறித்த பெண் உடல்கட்டுமான நிலையம் ஒன்றுக்கு சென்று நீச்சல் பயிற்சியை பெற்றுக்கொள்வது தொடர்பாக விசாரித்து வந்தார் என்று…

Read More

ஜன் தன் யோஜனா திட்டத்துக்கு தமிழக முதல்வர் ஆதரவு!

நரேந்திர மோடி துவக்கி வைக்கும் ஜன் தன் யோஜனா திட்டத்துக்கு தமிழகத்தில் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். கடந்த சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்ததைப் போல ஜன் தன் யோஜனா திட்டம் என்கிற அனைவருக்கும் வங்கிக் கணக்கு மற்றும் அதன் மூலம் ஒரு லட்சம் ரூபாய் காப்பீடு, ஓய்வூதியம் பெறும் திட்டத்தை இன்று பிரதமர் துவக்கி வைக்கிறார். உடனடியாக நாடு முழுவதும் இத்திட்டத்தை…

Read More

தமிழ், முஸ்லிம் மக்கள் தொடர்பில் இரு பெரும்பான்மை கட்சிகளும் பொறுப்பற்று செயல்படுகின்றன: மனோ கணேசன்

(பழுலுல்லாஹ் பர்ஹான்) இந்த அரசு இன்று வாக்குறுதிகளை மீறுவதில் உலக சாதனை செய்துள்ளது. உள்நாட்டில் நமது மக்களை மட்டுமல்ல, வெளிநாட்டிலும் அது உலக அரசுகளை ஏமாற்றுகிறது. இந்த கொடுங்கோல் அரசை தோற்கடித்து, வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதில் வேறு எவரையும் விட தமிழ், முஸ்லிம் மக்களுக்கே அதிக தேவை உள்ளது. -மனோ கணேசன்

Read More

“குரங்குகளைக் கொல்வது தீர்வாகாது”

காத்தான்குடியில் மக்களுக்கு தொல்லை கொடுத்துவரும் குரங்குகளை சுட்டுக் கொல்வது இந்தப் பிரச்சனைக்கு நீண்டகாலத் தீர்வாகாது என்கிறார் இலங்கையில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக குரங்கினங்களை ஆராயும் நிபுணர் சுனில் ஜெயதிலக. வீடுகள் மற்றும் கடைகளில் புகுந்து தொல்லை கொடுக்கும் குரங்குகளை சுட்டுத்தள்ள அரசிடம் துப்பாக்கியை கேட்டுள்ளது காத்தான்குடி நகரசபை. இப்பிரதேசத்தில், இந்த ஆண்டு மட்டும் 45 சிறுவர்கள் உட்பட சுமார் 75 பேர் குரங்குளின் கடிக்குள்ளாகி காயமடைந்துள்ளார்கள். ஆண்டு முழுவதும் உணவும் நீரும் கிடைப்பதால்தான் குரங்குகள் நகர்பகுதிக்கு…

Read More