Headlines

ad34@hFacMC

பொதுபல சேனா – விராது தேரரை விமர்சித்த இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்

பிரசித்தமான மியன்மார் இணையத்தளம் ஒன்று நேற்று சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இராவட்டி என்ற இந்த இணையத்தளம் பிரசுரித்திருந்த தலைப்புக் காரணமாகவே அதன்மீது ஊடுருவல் நடத்தப்பட்டதாக வெளிநாட்டு செய்தி ஒன்று தெரிவித்துள்ளது. குறித்த இணையத்தளத்தில் இலங்கைக்கு சென்றிருந்த பௌத்த பிக்குவான விராது தேரரும் இலங்கையின் பொதுபல சேனாவும் சந்திப்பு நடத்திய செய்தியில் இனவாதம் என்ற தலைப்பு இடப்பட்டிருந்தது. இந்தநிலையில் இராவட்டி இணையத்தளம் முஸ்லிம்களுக்கு சார்பானது என்றும், அது முஸ்லிம்களுக்கு ஆதரவளிப்பதாகவும் ஊடுருவலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Read More

வேன் ஆற்றில் பாய்ந்தது – ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் வபாத்..! (படங்கள்)

JM.Hafeez வேன் ஒன்று ஆற்றில் வீழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று முஸ்லிம்கள் ஸ்தலத்தில்  பலியாகி உள்ளனர். கண்டி – மாத்தளை பிரதான வீதியில் கட்டுகஸ்தோட்டையை அண்மித்த பிரதேசத்தில் பிங்காஓயாவில் வேன் ஒன்று விழுந்தே இவ்வாறு மூவர் உயிரிழந்துள்ளனர். (3.10.2014) அதிகாலை இடம்பெற்ற இவ்விபத்தில் உயிரிழந்தவர்கள் மாவனெல்லை உயன்வத்த பிரதேசத்தை செர்ந்த மூவராகும். அவர்கள் மொஹமட்  யூசுப், மொஹமட் பாரூக், பாத்திமா மிசிரியா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மட்டகளப்பு, ஓட்டமாவடி பிரதேசத்திலுள்ள உறவினர் வீடு ஒன்றிக்கு சென்று…

Read More

முஸ்லிம் நாடுகளுக்கு வீட்டுப் பணிகளுக்கென செல்லும் இலங்கை பெண்கள், அடிமை சேவைகளில்..!

மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளுக்கு வீட்டுப் பணிகளுக்கென செல்லும் இலங்கை பெண்கள், அங்கு அடிமை சேவைகளில் ஈடுபடுத்தப்படுவதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். சிங்கள வானொலி ஒன்றின் இணையத்தளத்திற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார். இது சம்பந்தமான எமது அமைப்பின் மாநாடுகள் மற்றும் சமய போதனைகளின் போது மக்களுக்கு விளக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கின் அடிமை தொழில் சம்பந்தமாக நாங்கள் கிராம மட்டத்தில் வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வருகிறோம்….

Read More

மேற்குலக நாடுகள் மீண்டும் சூழ்ச்சி- கண்டு பிடித்த அமைச்சர் டலஸ்

மேற்குலக நாடுகள் மீண்டும் சூழ்ச்சித் திட்டங்களை தீட்டத் தொடங்கியுள்ளதாக இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.விரைவில் ஜனாதிபதி அல்லது பொதுத் தேர்தல் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாம் அதைப் பற்றி பேசுவதற்காக வரவில்லை. நாட்டுக்கு எதிராக உள்நாட்டு, வெளிநாட்டு சூழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.மேற்குலக நாடுகள் இலங்கையை சிக்க வைக்க பல தடவைகள் முயற்சித்தன.ஒன்றும் சரிவரவில்லை. தற்போது மீண்டும் இறுதி முயற்சியாக இலங்கை நெருக்கடிக்குள் ஆழ்த்தும் சதித் திட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.நாட்டை பாதுகாக்கும் நீல மதில் சுவராக நாம்…

Read More

நாடாளுமன்றம் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கவில்லை- ரவூப் ஹக்கீம்

தற்போதைய நாடாளுமன்றம் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலை விடவும் பொதுத் தேர்தல் நடத்தப்படுவதனையே தமது கட்சி விரும்புகிறது.  தற்போதைய பாராளுமன்றம் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கவில்லை எனவும் மக்களின் ஆணையை புதிதாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட ஏனைய கட்சிகளின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு பின்னர் ஆளும் கட்சியில் இணைந்து கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகம் என அவர்…

Read More

ஜனாதிபதி தேர்தலில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் தேவை – ஐ.தே.க. போர்கொடி

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் போது சர்வதேச கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.தேர்தல் அறிவிக்கப்படும் நாள் முதலே சர்வதேச கண்காணிப்பாளர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.கடந்த கால தேர்தல்களின் போது அரசாங்கம் மோசமான முறையில் தேர்தல் விதிகளை மீறிச் செயற்பட்டுள்ளது. அரச சொத்து பயன்பாடு, சட்டவிரோத பிரச்சாரம், அடக்குமுறைகள் என பல்வேறு வழிகளில் அரசாங்கம் விதி மீறல்களில் ஈடுபட்டது.ஜனாதிபதி தேர்தலிலும் இ;வ்வாறான…

Read More

அடித்த பொலிஸிடம் 5 கோடி நஷ்டஈடு கோரிய பெண்

இரத்தினபுரி நகரில் பொலிஸ் அதிகாரியால் கடுமையாகத் தாக்கப்பட்ட பெண் 5 கோடி ரூபா நட்டஈடு கோரி அடிப்படை மனித உரிமை மீறல் மனு தாக்கல் செய்யவுள்ளதாக தெரியவந்துள்ளது.´பட்டி´ என்ற பெயரில் அழைக்கப்படும் குறித்த பெண் இரத்தினபுரி நகரில் பொலிஸ் அதிகாரி ஒருவரால் கடுமையாக தாக்கப்படும் காட்சி நபர் ஒருவரால் கையடக்கத் தொலைபேசியில் படம்பிடிக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டிருந்தது.இதனையடுத்து பெண்ணை தாக்கிய பொலிஸ் அதிகாரி பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டு.  அவர் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப்…

Read More

பாடசாலை செல்லாவிட்டால் பெற்றோர்களுக்கு தண்டனை

முல்லைத்தீவு பிரதேச மாணவர்கள் பலர் பாடசாலைக் கல்வியைப் புறக்கணித்துவிட்டு வீடுகளிலும்  வேலைத் தளங்களில்  பணிபுரிவதாக தெரிவித்த மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சம்பிக்க ஸ்ரீவர்தன பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பி வைக்காத பெற்றோர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  சிவில் பாதுகாப்புக் குழுக்களின் பிரதிநிதிகளை நேற்று சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.மேலும் அவர் உரையாற்றுகையில்,’பிள்ளைகளுக்கு கல்வி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது பெற்றோர்களின் கடமையாகும். மாணவர்கள் கல்வி கற்பதற்கு…

Read More

கொழும்பில் நங்கூரமிட்ட பாக். கடற்படைக் கப்பல்

 பாகிஸ்தானின் கடற்படை கப்பல்கள் இரண்டு நல்லெண்ண விஜயமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.தலைமை மாலுமி ஷஹீட் இல்யாஸ் தலைமையில் பி.என்.எஸ் என். எ. எஸ். ஆர் மற்றும் எஸ்.எ.ஐ.எப் ஆகிய இரு கடற்படை கப்பல்களும் கொழும்பு துறைமுகத்தில் நான்கு நாட்கள் தரித்து நிற்கவுள்ளது.பாகிஸ்தானின் எஸ்.எ.ஐ.எப் கடற்படைக் கப்பல் சீனாவின் F22P போர்க்கப்பலை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பலானது கடல்சார்ந்த செயற்பாடுகளையும் சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நவீன ஆயுதங்கள், சென்சர் மற்றும் இயந்திரங்களைக் கொண்டதாக இது தயாரிக்கப்பட்டுள்ளமை…

Read More

ஜெயலலிதாவிற்கு ஆதரவு கொடுத்த இலங்கை அகதிகள்

ஜெயலலிதாவிற்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையை எதிர்த்து திருச்சியில் இலங்கை தமிழ் அகதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.திருச்சி சிறப்பு அகதி முகாமில் வசித்து வரும் 30 இலங்கை தமிழர்கள் நேற்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 5.30 வரை இவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரியவருகிறது.இதேவேளை தமது கட்சி தலைவிக்கு விடுதலை வேண்டி அதிமுக உறுப்பினர்கள் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகளை நடத்தியுள்ளனர்.

Read More

கண்டி பாடசாலை மாணவி வல்லுறவு : சாரதி கைது

கண்டியில் உள்ள பிரபல மகளிர் பாடசாலை மாணவியை பாடசாலைக்கு  ஏற்றிச்செல்லும் வாகனத்திற்குள் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய  சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கண்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து கண்டி வாவி சுற்றுவட்ட சிவப்பு மதகு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம்  ஒன்றில் வல்லுறவில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது பொலிஸார் சந்தேகநபரை கைதுசெய்துள்ளனர். குறித்த மாணவி வாகன சாரதியான 37 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையால் மூன்று வருடங்களாக இவ்வாறு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு வந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது….

Read More

தெற்காசிய நாடுகளில் முதியோர் வாழ, மிகவும் உகந்த நாடாக இலங்கை

தெற்காசிய நாடுகளில் முதியோர் வாழ்வதற்கு மிகவும் உகந்த நாடாக இலங்கை கண்டறியப்பட்டுள்ளது. 96 நாடுகளின் வாழ்க்கைத் தரச் சுட்டி குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இருந்து இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஆய்வின் பின்னரான தரப்படுத்தல்படி இலங்கை 43ஆவது இடத்தை பிடித்துள்ளது. உலகில் முதியோர் வாழ்வதற்கு மிகவும் ஏற்ற நாடாக நோர்வே தரப்படுத்தப்பட்டுள்ளதுடன் முதியோர் வாழக்கூடிய சூழல் இல்லாத நாடாக ஆப்கானிஸ்தான் தரப்படுத்தப்பட்டுள்ளது. ஹெல்ப்ஏஜ் சர்வதேச குளோபல் AgeWatch குறியீட்டு ஆய்வானது சமூகம், பொருளாதாரம் மற்றும் சுகாதாரம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு…

Read More