வவுனியா, பம்பைமடு குப்பைமேட்டுப் பிரச்சினைக்கு அவசரமாகத் தீர்வுகண்டு, சாளம்பைக்குளம் உட்பட சுற்றுச்சூழவுள்ள பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களின் சுக வாழ்வுக்கு நடவடிக்கை எடுக்குமாறு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது, “இந்தப் பிரச்சினை, தீர்வுகாணப்படாமல் நீண்டகாலமாக இழுத்தடிக்கப்படுகின்றது. பிரதேச மக்கள் குப்பைமேட்டுப் பிரச்சினைக்குத் தீர்வுகண்டு, மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடந்தகாலங்களிலும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்த போது, அதிகாரிகள் உறுதிமொழிகளை வழங்கி,…