Headlines

ad34@hFacMC

தங்க நகை மோசடி விவகாரம்… என்னுடைய தாயார் மீது பொய்யான குற்றச்சாட்டடுக்களை சுமத்த வேண்டாம்.. நாமல்

தங்க நகைகளை மோசடியாக விற்பனை செய்ய முயன்றதாக தன்னுடைய தாயார் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை திட்டவட்டமாக மறுத்துள்ள நாமல் ராஜபக்‌ஷ, அரசியல் ரீதியாக வேண்டுமானால் என் மீதோ என்னுடைய தந்தையையோ தாக்குங்கள். என்னுடைய தாயாரை, குடும்பத்தினரை விட்டுவிடுங்கள் எனத் தெரிவித்திருக்கின்றார். “அரசியல் பழிவாங்கல்தான் உங்களுடைய நோக்கம் என்றால், என்னுடைய தந்தையை அல்லது என்னைத் தாக்குங்கள். என்னுடைய தாயார் மீதோ சகோதரர் மீதோ பொய்யான குற்றச்சாட்டடுக்களை சுமத்த வேண்டாம்” எனவும் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார். முன்னாள் பிரதிப் பொலிஸ்…

Read More

வடக்கில் இனவாதத்தை தூண்டி மூன்று மாதங்களில் ஆட்சியை பிடிக்க இராணுவ சூழ்ச்சி!!!

வடக்கில் இனவாதத்தை தூண்டிவிட்டு மூன்று மாதங்களில் ஆட்சியை பிடிக்க இராணுவ சூழ்ச்சி ஒன்று முன்னெடுக்கப்படுவது குறித்து தகவல் கிடைத்துள்ளதென சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமாகிய ராஜித சேனாரத்ன தெரிவித்தார். ரிவி தெரணவில் நேற்று (26) இரவு ஔிபரப்பான ´360´ அரசியல் நிகழ்ச்சியில் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் இது குறித்து கூறுகையில், ´எனக்கு செய்தி ஒன்று வந்துள்ளது. அதனை நான் அமைச்சரவை விசாரணைக்கு வழங்கவுள்ளேன். முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் நெருங்கிய…

Read More

உயர்தரத்துக்கு கணித பாட சித்தி கட்டாயம் – கல்வி அமைச்சு

உயர் தரக் கல்வியைத் தொடர்வதற்கு க.பொ.த. சாதாரணப் பரீட்சையில் கணித பாடம் கட்டாயமானது என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அறிவித்துள்ளார். கல்வி அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், உயர்தர பரீட்சையில் கணித பாடத்தில் சித்தியடைந்துள்ளவர்களின் விகிதாசாரத்தை அதிகரித்துக் காட்டுவதற்காக பரீட்சைத் திணைக்களத்துக்கு அரசியல் தலையீடுகள் கடந்த அரசில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த காலங்களில் கணித பாடத்தில் 35 புள்ளிகள் சித்தியடையும் மட்டத்தை சுமார்…

Read More

கொழும்பில் ஒருவழிப் போக்குவரத்து – இன்று ஒத்திகை

வௌ்ளவத்தை இராமகிருஸ்ண மற்றும் விவேகானந்த வீதிகள் இன்று சில மணித்தியாலங்கள் ஒருவழி போக்குவரத்து நடைமுறையில் இருக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை 6 மணியில் இருந்து முற்பகல் 11 மணிவரையும் மாலை 3 மணி தொடக்கம் இரவு 7 மணிவரையும் இந்த ஒருவழி போக்குவரத்து ஒத்திகை நடத்தப்படவுள்ளது. இதனடிப்படையில் இராமகிருஸ்ண வீதி ஊடாக கடற்கரை பகுதிக்கு மாத்திரமே வாகனம் செல்ல அனுமதிக்கப்படும். விவேகானந்த வீதி ஊடாக கடற்கரை பகுதியில் இருந்து காலி வீதியை நோக்கி செல்வதற்கு…

Read More

சுவிட்ஸர்லாந்தில் அடைக்கலம் கோரியவர்களில் இலங்கையர்களுக்கு மூன்றாம் இடம்

கடந்த வருடத்தில் சுவிட்ஸர்லாந்தில் அரசியல் அடைக்கலம் கோரியுள்ளவர்களில் இலங்கையர்கள் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளனர்.இதன்படி 1277 இலங்கையர்கள் அரசியல் அடைக்கல கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இது முன்னைய ஆண்டுக்களை காட்டிலும் 87 வீத அதிகரிப்பாகும். இந்தநிலையில் மொத்தமாக சுவிட்ஸர்லாந்தில் அடைக்கலம் கோரியவர்களின் எண்ணிக்கை கடந்த காலங்களை விட 11 வீதத்தால் அதிகரித்து 23,765ஆக இருந்தது.பல்வேறு நாடுகளிலும் இடம்பெற்று வரும் உள்நாட்டு பிரச்சினைகளே இதற்கான காரணங்களாகும்.இதன்படி எரிட்ரியாவில் இருந்து அதிகமான 6923 பேர் சுவிட்ஸர்லாந்தில் கடந்த வருடம் அடைக்கலம் கோரினர். 2014ஆம்…

Read More

கொழும்பு சாஹிராக் கல்லுாாி ;புகைப்பட போட்டி

அஸ்ரப் ஏ சமத் Colombo Zahira College  Photography competition certificate awarding ceremony and exhibition held at School’s premises. This events held under partinate  Principal of Zahira College Attorney at Law Risvi Marrikar.  The chief guest MTV Radio Channel  Director  Kingsely Rathnayake, Guest of Honour  Daily Mirror News Paper Deputy Editor Ramesh Uvais.and Parents,  Teachers also participated….

Read More

அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்கு முசலி பிரதேச மக்கள் வரலாறு காணாத மாபெரும் வரவேற்பு (படங்கள் இணைப்பு)

இர்ஷாத் றஹ்மத்துல்லா இலங்கை அரசியலில் புரட்சிகரமான பணியினை ஆற்றியதுடன்,கடந்த காலத்தில் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட அனைத்து விதமான சதி நடவடிக்கைகளுக்கு எதிராக அனைத்து சிறுபான்மை மக்களையும் ஓரணியில் இணைத்துக் கொண்டு புதிய ஆட்சி மாற்றத்திற்கான பங்காளியாக பரிணமித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,கைத்தொழில் வணிகத் துறை ,வாணிப அமைச்சருமான றிசாத் பதியுதீன் அவர்களுக்கு இன்று மாலை மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச மக்கள் வரலாறு காணாத மாபெரும் வரவேற்பு…

Read More

ஹூனைஸ் பாருக் தான் ஏறிவந்த ஏணியினை உதைத்து விட்டு ஏறவும்,முடியாமலும்,இறங்கவும் முடியாமலும், -அமீர் அலி

இர்ஷாத் றஹ்மத்துல்லா கடந்த 9 ஆம்; திகதி நாம் இந்த பொதுத் தேர்தலில் தோல்வியுற்று இருப்போமெனில் எமது சமூகத்தின் தலைவிதி மாறியிருக்கும் நாம் எங்கே போயிருப்போம் என்று தெரியாது என்று தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும்,சமூர்த்தி,வீடமைப்பு பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எம்.அமீர் அலி எமது கட்சியின் தலைவர் றிசாத் பதியுதீன் சமூகத்தின் தேசிய சொத்து என்றும் கூறினார். முசலி சிலாவத்துறையில் தற்போது இடம் பெற்றுக் கொண்டிருக்கும் மாபெரும் வரவேற்பு நிகழ்வில் உரையாற்றிக்கொண்டிருக்கின்ற போது மேற்கண்டவாறு கூறினார்….

Read More

ஞானசார தேரருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யுமாறு நீதவான் உத்தரவு

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக குற்றப் பத்திரிகையினை தாக்கல் செய்யுமாறு இன்ற உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவு கோட்டை நீதவான் திலினி கமகேயினால் பிறப்பிக்கப்பட்டது.அல் – குர்ஆன் அவமதிப்பு மற்றும் நிப்போன் ஹோட்டேலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அத்துமீறி நுழைந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார உட்பட பொதுபலசேனா அமைப்பின் உறுப்பினர்களுக்கு எதிராக இரண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த இரண்டு வழக்குகள்…

Read More

மத்திய வங்கி ஆளுநராக மகேந்திரன் நியமனம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சிபார்சின் பேரில் மத்திய வங்கியின் ஆளுநராக  அர்ஜுன் மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி செயலகத்தில் வைத்து நியமனக் கடிதத்தினை வழங்கி வைத்தார். அர்ஜுன் மகேந்திரன், கடந்த 30 வருட காலமாக தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் நிதி நிறுவனங்களில் பொறுப்பான பல பதவிகளை வகித்துள்ளார். இவர் ஓக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் தொடர்பான பட்ட பின் படிப்பை மேற்கொண்டுள்ளார். மேலும் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த 2002-2004வரையிலான காலப்பகுதியில்  இலங்கை முதலீட்டு…

Read More

அமைச்சர் றிஷாத் பதியுதீன் சவுதியிலிருந்து நாடு திரும்பினார்

ஊடகப் பிரிவு சவுதி அரேபிய நாட்டின் மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஸீஸ் அவர்களின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள றியாத் பயணமான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்.கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிஷாத் பதியுதீன் இன்று(26) அதிகாலை நாடுதிரும்பினார். வெள்ளிக்கிழமை இரவு றியாத் பயணமான அமைச்சர் அந்த நாட்டின் முக்கியஸ்தர்களையும் சந்தித்து இலங்கை அரசாங்கத்தினதும்.முஸ்லிம் மக்களினதும் கவலையினை தெரிவித்துள்ளார். அதே வேளை இன்று மாலை 4.00 மணிக்கு மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச மக்களினால்…

Read More

‘என்னை யும் எனது குடும்பத்தையும் கொலை செய்திருப்பார்கள்’ – ஜனாதிபதி மைத்திரி

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தாம் தோல்வியைத் தழுவியிருந்தால் கொலை  செய்திருப்பார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற காலத்தில் பாரிய நெருக்குதல்களை எதிர்நோக்கியிருந்ததாகத் தெரிவித்துள்ளார். தேர்தலில் தோல்வியைத் தழுவியிருந்தால் தமது பிள்ளைகளையும் குடும்பத்தாரையும் நிச்சயமாக மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் சிறையில் அடைத்திருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். தேர்தலில் தோல்வியடைந்திருந்தால் பிள்ளைகள் சித்திரவதை செய்யப்பட்டிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.  மாற்று வழியின்றியே சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதாகவும் அவ்வாறு செய்திருக்காவிட்டால் 100…

Read More