Headlines

ad34@hFacMC

நேபாள நாட்டவருக்கு, இலங்கையில் மரண தண்டனை

நேபாள நாட்டுப் பிரஜை ஒருவருக்கு கண்டி நீதிமன்றம் இன்று 12-03-2015 மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஹெரொயின் போதைப் போருள் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 63 வயதுடைய நபருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் நோபாளம் – லலித்புர பட்டான் பிரதேசத்தைச் சேர்ந்தவர். கடந்த 2010ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி குறித்த நபர் தனது உடம்பினுள் சுமார் 80 கிராம் அளவு ஹெரோயின் வைத்திருந்த நிலையில் கண்டியில் வைத்து கைது…

Read More

பாணந்துறையில் பெண்களின் மண்டையோடுகளும் எலும்புகளும் மீட்பு

பாணந்­துறை தெற்கு பகுதி வீடொன்றில் இருந்து உயி­ரி­ழந்த இரண்டு சகோ­த­ரி­க­ளு­டை­யது என சந்­தே­கிக்­கப்­படும் மண்­டை­யோ­டு­களும் மனித எலும்­புக்­கூ­டு­களும் நேற்று கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளன. வயோ­திபப் பெண்­க­ளான இரு­வரும் சில மாதங்­க­ளுக்கு முன்னர் உயி­ரி­ழந்­தி­ருக்­கலாம் என பொலிஸார் சந்­தே­கிக்­கின்­றனர். சுமார் இரண்டு வரு­டங்­க­ளுக்கு பின்னர் குறித்த தமது சகோ­த­ரிகள் வாழ்ந்த வீட்­டுக்கு வந்து பார்த்த போது சகோ­த­ரி­களின் மண்­டை­யோ­டு­களும் மனித எலும்­புக்­கூ­டு­களும் காணப்­பட்­ட­தாக பெண்­களின் சகோ­தரர் பொலிஸில் முறைப்­பாடு செய்­துள்ளார். இந்­த­நி­லையில் மரண விசா­ரணை இடம்­பெறும் வரை சம்­பவ இடத்தில் பொலிஸ்…

Read More

சிரியா மக்களை உலகம் கைவிட்டு விட்டது: பான் கி-மூன் வேதனை

உள்நாட்டு போரினால் சிரியா மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மக்களை மொத்த உலகமும் கைவிட்டு விட்டதாக ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூன் வேதனை தெரிவித்துள்ளார். 2011-ல் சிரியாவில் அமைதியான வழியில் அந்நாட்டு அரசுக்கு எதிராக ஆரம்பித்த மக்கள் போராட்டம் பெரும் உள்நாட்டு போராக வெடித்தது. இதன் காரணமாக இன்று வரை அந்நாட்டு அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். நான்கு ஆண்டுகளையும் கடந்து ஐந்தாவது ஆண்டில் நுழையவிருக்கம் இப்போரில் இதுவரை 2 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாகவும், 4 மில்லியனுக்கு…

Read More

மோடியை வரவேற்கும் உத்தியோகபூர்வ வைபவம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் உத்தியோகபூர்வ வைபவம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி செயலக முன்றலில் இந்த வரவேற்பு வைபவம் இடம்பெற்றதுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நரேந்திர மோடியை வரவேற்றார். இந்திய பிரதமருக்கு செங்கம்பள வரவேற்பும் அளிக்கப்பட்டது.பிரதமர் நரேந்திர மோடிக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன், மரியாதை வேட்டுக்களும் தீர்க்கப்பட்டன. இந்த உத்தியோகபூர்வ வைபவத்தின் பின்னர், இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன.

Read More

வட்டியில்லா வங்கிமுறை ஒன்றின் அவசியம்

பக்கீர் எம் இஸ்ஹாக் B.A கமியூனிசம் தோற்றுப்போனது. முதலாளித்துவம் ஆட்டம் கண்டுகொண்டிருக்கிறது. இஸ்லாம் ஒன்றே பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை சமூகத்தில் இருந்து குறைக்க முடியும். அதனால்தான் இஸ்லாம் சக்காத் என்னும் திட்டத்தை அறிமுகம் செய்கின்றது. ஆனால் இது ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதுதான் இங்கு கவலை தரும் விடயம். வாழ்க்கையை ஒரு மரதன் ஓட்டத்திற்கு ஒப்பிட முடியும். இங்கு விரும்பியவர்களல்லாம் அப்போட்டியில் கலந்து தன்னால் இயன்றளவு ஓடலாம். ஆனால் இங்கு 3 பேருக்கு 1ம் 2ம் 3ம்…

Read More

BBS ஒரு நிராகரிக்கப்பட்ட அமைப்பு: ஜனாதிபதி

இதன் போது இலங்கை முஸ்லிம்கள் ஆட்சி மாற்றத்தின் பின் சந்தோசமாக இருப்பதாக தான் அறிந்துள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி அந்த சந்தோசம் நீடிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மற்றும் சர்வதேச உறவுகளின் அவசியம் குறித்தும் விளக்கியதோடு ஜனாதிபதி பிரதிநிதிகள் குழுவில் அவரோடு பயணித்து குறித்த சந்திப்பின் விசேட அதிதியாக இணைந்து கொண்ட மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலியின் நட்பு பற்றியும் அவரிடம் அறிவுரை பெறுவது பற்றி நகைச்சுவையாகவும் அளவளாவியிருந்தார். சர்வதேச உறவுகளை மீளக் கட்டியெழுப்புவதில் குறிப்பாக ஐக்கிய…

Read More

அமைச்சர் றிஷாத் பதியுத்தீனுடனான அரசியல் காழ்ப்புணர்சியின் வெளிப்பாடே அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு – ஹில்மி மகரூப்

கிண்ணியா ஜிப்ரி மதிப்புக்குறிய அமைச்சர் றிசாட் பதியுத்தீன் இலங்கை முஸ்லீம்களின் அதி சிறந்த அரசியல் தலைவர்களின் ஒருவர் அவர் ஏனைய தலைவர்களின் நன் மதிப்பையும் நம்பிக்கையும் வென்றவர். எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவராக இருந்து ஒரு சிறந்த தலைமைத்துவ நெறியாலுகையினால் உலகிலுள்ள 500 தலைவர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் நமது இலங்கை மண்ணுக்கும் தமிழ் பேசும் சமூகத்திக்கும் பெருமை தேடித்தந்தவர் இவ்வாராண ஒரு தலைவர் மீது ஊழல் குற்றச் சாட்டு சுமத்துவது என்பது மிகவும்…

Read More

மோடி இலங்கையை வந்தடைந்தார்

அஸ்ரப் ஏ சமத் இந்திய பிரதமர் மோடி இன்று காலை இலங்கை வந்தடைந்தார். இன்று காலிமுகத்திடலில் மகத்தாண வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க கட்டுநாயக்க விமான நிலையத்தில்; வைத்து இந்தியப் பிரதமரை வரவேற்றார். இவரின் வருகைக்காக கொழும்பில் மட்டும் 5000 பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர். கொழும்பில் இந்திய இலங்கை தேசியக் கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளது. இன்று பாராளுமன்றத்தில் இந்தியப் பிரதமர் விஷேட உரை நிகழ்த்த உள்ளார் அதன் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபாலவை…

Read More

சவூதி மன்னரின் விஷேட ஆலோசகர் – பிரதியமைச்சர் அமீர் அலி சந்திப்பு

அஸ்ரப் ஏ சமத் சவூதி  அரேபியாவின் ரோயல் – மன்னரின் விஷேட ஆலோசகர் கலாநிதி பாயிஸ் அல் ஆப்டின் நேற்று வீடமைப்பு சமுர்த்தி பிரதியமைச்சர் அமீர் அலியை அவரது அமைச்சில் வைத்து சந்தித்தார். இச் சந்திப்பின்போது கிழக்கு மாகணத்தின் வீடமைப்புத்திட்டங்கள் மற்றும் நிர்மானத்துறை பற்றியும் பிரதியமைச்சர் சவூதி  மன்னரின் ஆலோசகருடன் கலந்துரையாடினார்.

Read More

அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் வெளிநாடு செல்ல தடை

அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதிக்கு வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வர்த்தக நடவடிக்கை ஒன்றுக்காக தமது கட்சிக்காரரான சேனாதிபதி நைஜீரியா செல்ல வேண்டியுள்ளதால் அவருக்கு அனுமதி அளிக்குமாறு சட்டத்தரணி நீதிமன்றில் கேட்டுக் கொண்ட போதிலும் நீதிமன்றம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. காலி துறைமுகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் மற்றும் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் ஆயுதங்களை களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் காரணமாகவே இவருக்கு வெளிநாடு செல்ல…

Read More

பதில் பிரதம நீதியரசராக சந்ரா ஏக்நாயக்க நியமனம்

பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் சந்ரா ஏக்நாயக்க, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவன் தற்போது வெளிநாடு சென்றுள்ளதை அடுத்தே இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் இன்று மாலை பதில் பிரதம நீதியரசாரக சந்ரா ஏக்நாயக்க, ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

Read More

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு உச்ச நீதிமன்றம் அழைப்பாணை

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு உச்ச நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பில் பரிசீலனை செய்த உச்ச நீதிமன்றம் இந்த அழைப்பாணை உத்தரவினை பிறப்பித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமை ரத்து செய்யப்பட்டமைக்கு எதிராக அத்தநாயக்க மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு எதிர்வரும் 19ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

Read More