Headlines

ad34@hFacMC

நம்பிக்கையாளர்களின் உரிமையை பாதுகாக்க அடிப்படை உரிமை மனு..!

கொவிட் – 19 (கொரோனா) வைரஸினால் உயிரிழப்போரை தகனம் செய்யக் கோரும் திருத்தப்பட்ட வர்த்தமானியை வலுவிழக்கச் செய்யுமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளது. குறித்த இவ் வர்த்தமானி (2170/08) சுகாதார அமைச்சினால் ஏப்பிரல் மாதம் நான்காம் திகதி வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. உச்ச நீதிமன்றத்தில் நேற்று (14) தாக்கல் செய்யப்பட்ட இதற்கெதிரான மனுவில், சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னிஆரச்சி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர். அனில் ஜாசிங்க, சுகாதார…

Read More

ஜனாஸா எரிப்புக்கு எதிராக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்!

கொவிட் – 19 வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் அனைவரையும் அங்கீகரிக்கப்பட்ட சுடலை அல்லது இடத்தில் தகனம் செய்ய வேண்டுமென, கடந்த ஏப்ரல் ௦4 ஆம் திகதி சனிக்கிழமை திகதியிடப்பட்டு, சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சர் பவித்திராதேவி வன்னிஆரச்சியினால் வெளியிடப்பட்ட 2170/08 எனும் வர்த்தமானியை வலுவிழக்கச் செய்யக் கோரி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட அக்கட்சியின் தவிசாளர் அமீர் அலி, தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப், பொருளாளர் ஹுசைன் பைலா…

Read More

“உடல்களை அடக்கம் செய்வதையும் அனுமதித்து வர்த்தமானி அறிவித்தலில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுங்கள்” – ஜனாதிபதியிடம் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை!

கொவிட் – 19 காரணமாக மரணிக்கும் உடல்களை அடக்கம் செய்வதும் ஓர் அனுமதிக்கப்பட்ட அப்புறப்படுத்தும் முறையாக இணைத்து, 2020.04.11 வெளியிடப்பட வர்த்தமானி அறிவித்தலில் திருத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது, கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் இறுதிச் சடங்குகள் மற்றும் மரணித்த உடல்களை அகற்றல்!!!  பூகோளம் முழுவதிலும் கொவிட் – 19 தொற்றுநோய் காரணமாக…

Read More

“ரஹ்மத்துடைய ரமழானில் இறைவன் பொருந்திக்கொள்ளட்டும்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்!

ரஹ்மத்துடைய ரமழானில் இறைவன் பொருந்திக்கொள்ளட்டும்…! ஜெனீவாவில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்த கொழும்பைச் சேர்ந்த ஜிப்ரியை எல்லாம் வல்ல இறைவன் பொருந்திக்கொள்ளப் பிரார்த்திக்கிறேன். சகலருடனும் அன்பொழுகப் பழகிய மர்ஹும் ஜிப்ரி, நாடிவருவோருக்கு உதவி புரிந்து, பல வழிகாட்டல்களை வழங்கியவர். ஜெனீவாவுக்கு வரும் உறவினர், நண்பர், தெரிந்தோர், தேடிவருவோரை ஆரத்தழுவி, அணைத்து ஒத்தாசைகளை வழங்கும் பெரும்பண்பாளனின் இழப்பு, எனது நிம்மதிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதை நான் உணர்கிறேன். ஜெனீவா சென்ற போதெல்லாம் என்னை அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று, உபசரிப்பதுடன்…

Read More

“வெளிநாடுகளில் பணியாற்றும் பாதிக்கப்பட்ட இலங்கையர் தொடர்பில் சரியான வேலைத்திட்டம் தேவை’ – அரசாங்கத்திடம் முன்னாள் அமைச்சர் ரிஷாட் வேண்டுகோள்!

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் கொரோனா வைரஸ் தாக்கத்தின் பின்னர் எதிர்நோக்கும் கஷ்டங்கள் தொடர்பில், சரியான வேலைத்திட்டமொன்றை இலங்கை அரசு முன்னெடுப்பதோடு, துன்பத்தில் வாழும் பணியாளர்களுக்கு விமோசனம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். “அங்கு வாழும் பலர் தொழில்களை இழந்துள்ளனர். இன்னும் ஒரு பகுதியினர் சம்பளம் கிடைக்காது கஷ்டத்தில் வாழ்கின்றனர். தங்குவதற்குக் கூட சரியான இடமின்றி தவிக்கின்றனர். அன்றாட உணவுக்கே பிரச்சினையான நிலை…

Read More

“ஊர்வலங்கள் மேளதாளங்கள் அன்றி உணர்வு ரீதியாக கொண்டாடுவோம்” – மேதின செய்தியில் முன்னாள் அமைச்சர் ரிஷாட்!

தொழிலாளர் வர்க்கத்தினரின் உழைப்பு, அர்ப்பணிப்பு, வாழ்க்கைப் போராட்டங்களுக்கு விடிவு, விடுதலை கிடைக்க வேண்டுமெனக் கூறியுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட்பதியுதீன், அதிகாரத் தொனியில் உழைப்பாளிகளை அடக்க முனைவதை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் குறிப்பிட்டுள்ளார். தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது பற்றி, மேலும் தெரிவித்துள்ளதாவது, தினமும் உழைத்தாலும் வாழ்க்கையில் உயர முடியாத நிலையிலே தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களின் உரிமைக்கான குரல்கள் ஓங்கி ஒலித்துப் புரட்சி ஏற்பட்டதாலே உலகெங்கும் “மே…

Read More

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு!

இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழும் வன்னி மாவட்ட வாக்காளர்களுக்கு, கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, வன்னி மாவட்டத்தில் வாக்களிப்பதற்கான போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்தமைக்காக, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் வேண்டுமென்றே குற்றங்களைச் சுமத்தி, அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதனால், அதற்கு எதிராகவும் அதனைத் தடுத்து நிறுத்தும் வகையிலும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். முன்னாள் அமைச்சர்…

Read More

புத்தளத்தில் வாழும் மன்னார் வாக்காளர்களுக்கு நிவாரணம் வழங்க அரச அதிபர் நடவடிக்கை!  

புத்தளத்தில் வாழும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு நிவாரணம் மற்றும் இதர கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கும் வகையில், அவர்களின் விபரங்கள் மற்றும் தகவல்களை உடன் அனுப்பி வைக்குமாறு கோரி, மன்னார் மாவட்ட அரச அதிபர் சீ.ஏ. மோகன் ராஸ் மன்னார் நகரம், முசலி, மாந்தை மேற்கு, நானாட்டான் ஆகிய பிரதேச செயலாளர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். புத்தளத்தில் வாழும் இந்தக் குடும்பங்கள் மன்னாரிலோ அல்லது புத்தளத்திலோ எந்தவிதமான உதவிகளும் பெறாமல் மிகவும் கஷ்டப்படுவதாகவும், கொரோனா…

Read More

ஜனாதிபதியிடம் “10 அம்சக் கோரிக்கை” எதிர்க்கட்சிகள் வழங்கத் தீர்மானம்!

பொதுத் தேர்தல் உரிய திகதியில் நடத்தப்படாததை அடுத்து, பழைய பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும் என்ற பிரதான காரணி உள்ளடங்கலாக பத்து அம்சக் கோரிக்கையில் ஐக்கிய தேசிய கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய மக்கள் சக்தி, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கையொப்பமிட்டுள்ளன. கையொப்பமிடப்பட்ட பத்து அம்சக் கோரிக்கை இந்த வார இறுதிக்குள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும்.  பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், நாட்டில் தற்போது…

Read More

“தேர்தலுக்கான திகதி அறிவிப்பில் அவசரம் வேண்டாம்” – மக்கள் காங்கிரஸ் தலைவர், தேர்தல் ஆணைக்குழு தலைவரிடம் வேண்டுகோள்!

தேர்தல் நடத்தக் கூடிய ஒரு சிறந்த சூழல் ஏற்படும் வரை, தேர்தல் திகதியை அறிவிக்க வேண்டாமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், தேர்தல் ஆணைக்குழுத் தலைவரிடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது, கொவிட் 19 தொற்று எண்ணிக்கை சாதாரண அளவில் இருப்பதாக சிலரால் கூறப்பட்ட போதும், உண்மையில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை இன்னும் மத்திம நிலையிலேயே காணப்படுகின்றது. சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத் துறை உட்பட்ட பல்துறை…

Read More

‘ரியாஜ் பதியுதீனின் கைது, அரசியல் காழ்ப்புணர்ச்சியின் புதிய பாய்ச்சல்’ – முன்னாள் எம்.பி அப்துல்லாஹ் மஹ்ரூப் கண்டனம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீனின் கைது மற்றும் அவர் மீது குற்றஞ்சுமத்தி, பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கை என்பன அரசியல் பழிவாங்கலுக்கான திட்டமிட்ட  சதியென மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் கவலை தெரிவித்துள்ளார். இணக்கப்பாட்டு அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்துவதற்கான புதிய அரசியலமைப்பை உருவாக்கும் இன்றைய சூழலில், இவ்வாறான கைதுகளால் ஜனநாயகத்துக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதென்றும் அவரது அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள…

Read More

Statement of Former Minister Rishad Bathiudeen on the Arrest of his Brother Riyaj Bathiudeen!

Statement of Former Minister Rishad Bathiudeen on the Arrest of his Brother Riyaj Bathiudeen… My Brother Mr. Riyaj Bathiudeen was arrested by the Criminal Investigation Department while he was at his house in Puttalam on 14.04.2020 stating that he had connection with a suicide bomber with respect to Easter Sunday Attacks. Until now none of…

Read More