”இஸ்லாமியர்கள் வேண்டாம், கிறித்தவர்களை மட்டுமே ஏற்போம்”
பிரான்ஸ் நாட்டிற்குள் கிறித்துவ மதத்தை சேர்ந்த அகதிகளை மட்டுமே ஏற்றுக்கொள்வோம் என அந்நாட்டு மேயர்கள் வெளியிட்ட கருத்திற்கு உள்துறை அமைச்சகம் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து சுமார் 24 ஆயிரம் அகதிகளுக்கு குடியமர்வு அனுமதி வழங்க முடிவு செய்துள்ளதாக பிரான்ஸ் நாட்டு அதிபரான பிராங்கோயிஸ் ஹாலண்டே சில தினங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதிபரின் இந்த அறிவிப்பை சில மாநகர மேயர்கள் வரவேற்றிருந்தாலும், சில மேயர்கள் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்….
