Headlines

ad34@hFacMC

பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட குருநாகல்,மல்லவபிட்டிய ஜும்மா பள்ளிவாசாலை பார்வையிட்ட நவவி எம்.பி

இன்று அதிகாலை பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட குருநாகல், மல்லவபிட்டிய ஜும்மா பள்ளிவாசாலை புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்கள் பார்வையிட்ட போது..

Read More

தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா.வரலாறு படைத்தது ஆலையடிவேம்பு பிரதேசம்.

அ.இ.ம.கா. தேசியத் தலைவரும் , கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான கௌரவ ரிசாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் ஆலையடிவேம்பு, கோளாவில் – 02 பிரதேசத்தில் தையல் பயிற்சி நிலையம் ஒன்று (20. MAY. 2017) திறந்து வைக்கப் பட்டது. காமோதரம் ஜெயாகர் (ஜெயா மாஸ்டர்) அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அவர் “ நாடு சுதந்திரமடைந்த காலத்திலிருந்து எங்கள் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட முதலாவது தொழிற்சாலை இதுவாகும்” என்று என்னிடம் தெரிவித்தார். அத்துடன் கௌரவ தேசியத் தலைவர் ரிசாட்…

Read More

ஞானசார தேரரை கைது செய்ய அரசு தயக்கம் காட்டுவதேன்? பிரதமரிடம் ரிஷாட் முறையீடு

சுஐப் எம் காசிம் அல்லாஹ்வையும் முஸ்லிம்களையும் தொடர்ச்சியாக, மோசமாக கேவலப்படுத்தி வரும் ஞானசார தேரர் நேற்று முன் தினம் (19) ஆம் திகதி பொலிஸ் நிலையத்திற்கு வந்த போது, அவருக்கெதிராக முறைப்பாடு இருந்தும், அவரைக் கைது செய்யாமல் விட்டு விட்டு நேற்று மாலை (20) குருநாகல் பகுதியில் அவரை கைது செய்ய எய்ப்புக்காட்டிய பொலிஸாரின் நாடகம் குறித்து அமைச்சர் ரிஷாட் தனது விசனத்தை பிரதமரிடம் தெரிவித்துள்ளார். ஞானசார தேரரின் முஸ்லிம்கள் தொடர்பான நடவடிக்கைகள் எல்லை மீறி இருப்பதை…

Read More

அமைச்சர் றிஷாட் பேட்டி

கேள்வி– பொதுபல சேனா இயக்க செயலாளர் ஞானசாரரை கைது செய்ய வேண்டுமென   பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடொன்றை செய்துள்ளீர்களே? பதில்– ஆம். ஞானசார தேரரின் நடவடிக்கைகள் எல்லை மீறி விட்டன அல்லாஹ்வை பகிரங்கமாக தகாத வார்த்தைகள் கொண்டு தூற்றி வருகின்றார். இனவாதத்தை மோசமாக கட்டவிழ்த்து விடுகின்றார் இதனாலேயே நானும் அமைச்சர் பைசர் முஸ்தபாவும் பாராளுமன்ற உறுப்பினர் மரிக்காரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலியும் கூட்டாக இந்த முறைப்பாட்டை பதிவு செய்து அவரை உடனடியாக கைது செய்யுமாறு…

Read More

தோப்பூர், களநிலைமைகளை அமைச்சர் றிஷாட் நேரில் சென்று ஆராய்வு

  அமைச்சின் ஊடகப்பிரிவு தோப்பூர், செல்வநகர், நினாய்க்கேணிப் பகுதிக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் இன்று மாலை (2017.05.19) விஜயம் செய்தார். கடந்த செவ்வாய்கிழமை இந்தக்கிராமத்தில் வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் மீது இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து நடந்த விடயங்களை கேட்டறிந்து கொண்டார். இனந்தெரியாதோர் தமது கிராமத்துக்கு வந்து தாக்குதல்களை நடாத்தி தம்மை இந்தப்பிரதேசத்திலிருந்து வெளியேறுமாறு அச்சுறுத்தியதாக கிராமத்தவர்கள் தெரிவித்தனர். ‘நினாய்க்கேணியில் 127 பேருக்குச் சொந்தமான சுமார் 49 ஏக்கர்…

Read More

சட்டத்தை கையிலெடுத்துள்ள இனவாதத்தேரர்களை கட்டுப்படுத்துங்கள். மன்னாரில் பிரதமர் முன்னிலையில் அமைச்சர் ரிஷாட் வலியுறுத்து

ஊடகப்பிரிவு   இனவாத பௌத்த மத குருமார் ஒரு சிலர் சட்டத்தை கையிலெடுத்து தாங்கள் விரும்பியவாறு செயற்பட்டுக்கொண்டிருப்பதை அரசாங்கம் உடன் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார்.   மன்னார் மாவட்ட செயலக நிருவாக கட்டிடத்தை இன்று காலை (19.05.2017) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திறந்து வைத்த நிகழ்வின் பின்னர் இடம்பெற்ற கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றினார். அவர் கூறியதாவது, பௌத்த மத குருமார்களில் ஒரு சிலர் ஜனாதிபதி போலவும், பிரதமர் போலவும்,…

Read More

புத்தளம் நகருக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ வீ. இராதகிருஸ்ணன் விஜயம்..

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்களின் அழைப்பின் பேரில் நேற்று (2017-05-16) செவ்வாய்க்கிழமை இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ வீ. இராதகிருஸ்ணன் அவர்கள் புத்தளம் மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.. இதன் முக்கிய நிகழ்வாக புத்தளம் நகருக்கான கல்வி இராஜாங்க அமைச்சர் அவர்களின் விஜயம் அமைந்திருந்தது.. இங்கு… புத்தளம் ஜனதிபதி விஞ்ஞான கல்லூரிக்கான மூன்று மாடிகளை…

Read More

ஞானசாரரை கைது செய்யுமாறு முஸ்லிம் தலைவர்கள் பொலிஸ்மா அதிபரிடம் புகார்.

சுஐப் எம் காசிம் அல்லாஹ்வை வேண்டுமென்றே கேவலப்படுத்திவரும் ஞானசார தேரரை உடனடியாக கைதுசெய்ய வேண்டுமென மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன், சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதித்தலைவரும் அமைச்சரமான பைசர் முஸ்தபா, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி ஆகியோர் கூட்டாக இணைந்து பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு ஒன்றை இன்று மாலை (05.18.2017) பதிவு செய்துள்ளனர். ஞானசார தேரர் முஸ்லிம்கள் மீதும் அல்லாஹ்வின் மீதும் தொடர்ச்சியாக கக்கிவரும்…

Read More

கல்லிலே நார் உரிக்கப்பட்ட நிலையில் தீர்வை நோக்கி நகரும் மறிச்சுக்கட்டிப் பிரச்சினை

சுஐப் எம் காசிம் மறிச்சுக்கட்டி, கரடிக்குளி, பாலைக்குளிக் கிராமங்களில் காலா காலமாக வாழ்ந்த மக்களின் பூர்வீகக் காணிகளும் வாழ்வாதாரத் தேவைகளுக்காக அவர்கள் பயன்படுத்தி வந்த மேட்டு நிலங்களும் வர்த்தமானி அறிவித்தல் மூலம் கையகப்படுத்தப்பட்டமையை அடுத்து அந்த ம்க்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயங்களுக்கு தீர்வு காணும் வகையில் ஜனாதிபதி மூன்று பேர் கொண்ட ஆணைக்குழுவை அமைத்துள்ளார். இந்த ஆணைக்குழு ஒரு மாதத்தில் இந்த விடயங்களை ஆராய்ந்து ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென ஜனாதிபதின் செயலாளர் பி பி அபேயகோன் பணித்துள்ளார்….

Read More

கொழும்பு கிருலப்பனை குல்லியதுல் இமாம் அஷ்ஷாபிஈ மத்ரஷாவின் இரண்டாவது பட்டமளிப்பு விழா

அதிபர் அஷ்ஷேய்க் நாஸீர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். தலைமையுரையை நிகழ்த்திய அதிபர், மத்ரஷாவின் 17வருடகால சாதனைகளையும் வரலாற்றையும் எடுத்துரைத்தார். இவ்வைபவத்தில் பிரதம பேச்சாளராக கலந்து கொண்ட அஷ்ஷேய்க் யூசுப் ஹனிபா (முப்தி) அவர்கள், உரையாற்றிய போது, நல்ல விஷ்யங்களுக்குச் செலவழித்தல், கொடுக்கப்பட்டவருக்குக் கிடைக்கும் பிரயோஷனங்களை விட, கொடுத்தவருக்குக் கிடைக்கும் நன்மை மேலானது என்றார். புனித நோன்பு எம்மை வந்தடையும் முன்னர், பாவ மீட்சி பெற்று…

Read More

விஷேட குழு ஒரு மாதத்துல் அறிக்கை சமர்ப்பிக்க பணிப்பு ஜனாதிபதி செயலகம் அறிக்கை.

மன்னார் மாவட்டத்தில் போரால் இடம்பெயர்ந்தோர் மற்றும் அப் பிரதேசத்தில் குடியேற்றப்பட்டுள்ள இடம்பெயர்ந்தோரின் பிரச்சினைகளை ஆராய்வதற்கான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி செயலாளர் பி.பீ.அபேகோன் அவர்களது தலைமையில் நேற்று (16) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. முஸ்லிம் பிரதிநிதிகள் மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட வன பாதுகாவல் திணைக்கள அலுவலர்களும் இக் கலந்துரையாடலில் கலந்த கொண்டனர். அப் பிரதேச மக்கள் சில பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்திருந்தால் அவற்றை எவ்வாறு தீர்ப்பது என்பது தொடர்பில் விரிவாக கலந்தரையாடப்பட்டது. இந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக…

Read More

இந்த விடயத்தில் அரசாங்கம் தொடர்ந்து பாராமுகமாக இருக்கக்கூடாது!

நேற்று நள்ளிரவு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட வெல்லம்பிட்டிய கொஹிலவத்தை இப்ராஹிமிய்யா ஜும்மா பள்ளிக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று (16.05.2017) நண்பகளலவில் விஐயம் செய்து நிலைமைகளை பார்வையிட்டார். நடந்த விடயங்களை கேட்டறிந்துகொண்ட அவர் வெல்லம்பிட்டய பொலிஸ் பொறுப்பு அதிகாரியைச் சந்தித்து நிலைமைகளை விசாரித்ததுடன் பாதுகாப்பு தொடர்பில் தீவீர கவனம் செலுத்துமாறு வேண்டினார். புனித றமழான் நெருங்கும் போது இனவாதிகள் இவ்வாறான குழப்பத்தை உருவாக்கி சமூகங்களுக்கிடையே பிரச்சினையை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டு செயற்பட்டதை கடந்தகால வரலாறு. அந்த பின்னணியிலேயே வெல்லம்பிட்டி…

Read More