Headlines

உயிர் தியாகம் செய்ய தயார் – ஜனாதிபதி மைத்திரி




“அரசியல் மற்றும் சமூக மாற்றத்திற்காக எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க செய்த தியாகத்தை எமது நாடு மீண்டும் வேண்டி நிற்கிறது. நாட்டுக்குத் தேவையான மாற்றங்களைக் கொண்டுவர எனது உயிரையும் தியாகம் செய்யத் தயாராகவுள்ளேன்” – என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

உலகில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்காக உழைத்த எந்தவொரு அரசியல்வாதியும் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. அவர்களுடைய உயிர்களையும் கூட தியாகம் செய்ய வேண்டியிருந்தது. எந்த சவால்களுக்கும் அஞ்சாது எல்லா சமூக அரசியல் சக்திகளையும் ஒன்றிணைத்து நாட்டில் சமூக, பொருளாதார , அரசியல் மாற்றங்களைக் கொண்டுவர தான் அர்ப்பணத்தோடு உள்ளேன் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

தம்பதெனியவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் மத்தியில் விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்குடன் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *