Headlines

பாடசாலை மாணவன் சடலமாக மீட்பு




உடவலவ – மிரிஸ்வெல்பொத்த பாடசாலைக்கு அருகிலிருந்து மாணவன் ஒருவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 17 வயதுடைய மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலத்தில் வெட்டுக்காயங்கள் இருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த மாணவன் நேற்று தனியார் வகுப்பிற்கு சென்று  வீடு திரும்பாமையினால்  அவரது தந்தை சம்பவம் தொடர்பில்  பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்நிலையில் இன்று காலை குறித்த மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *