Headlines

மாபெரும் இறுதிப் போட்டியாக ஜனாதிபதித் தேர்தல்! ரணில் சூளுரை!




ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர் அணியான ஜாதிக யொவுன் பெரமுனவின் கொழும்பு கிளை சார்பில் விளையாட்டுப் போட்டியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐ.தே. க. தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அதனைத் தொடங்கி வைத்து உரை நிகழ்த்தும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

எந்தவொரு நாட்டிலும் ஆட்சி மாற்றம் இளைஞர்களின் பங்களிப்பின் மூலமாகத் தான் நிகழ்ந்துள்ளது. இந்நாட்டிலும் அவ்வாறானதோர் மாற்றம் நிகழ இளைஞர்களின் ஆர்வமும், பங்களிப்பும் தேவைப்படுகின்றது.

விளையாட்டுப் போட்டிகளைப் போன்றது தான் அரசியல் களமும். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் அரசுக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையேயான மாபெரும் இறுதிப் போட்டியாகும். இதில் நிச்சயமாக நாம் வெற்றிபெறுவோம்.

அந்த வெற்றியைப் பெற்றுத் தருவதற்கு பொதுமக்களுடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சி அங்கத்தவர்கள் அனைவரும் பாடுபட வேண்டும் என்றும் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *