Headlines

சிறுபான்மை மக்களின் வாக்குகளினாலேயே தோற்றுள்ளேன்: மஹிந்த




ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளிலிருந்து அளிக்கப்பட்ட வாக்குகளினாலேயே தான் தோற்கடிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதனைத் தவிர்த்து, தான் தோல்வி அடைந்ததாகக் கருதவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று வெள்ளிக்கிழமையே தன்னுடைய சொந்தக் கிராமமான அம்பாந்தோட்டையின் மெதமுலனவிற்கு சென்றார். அங்கு, கூடியிருந்த மக்கள் மத்தியில் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *