Headlines

மக்கள் காங்கிரஸின் தம்பலகாமம் பிரதேச சபை புதிய உறுப்பினர் நியமனம்!

திருகோணமலை, தம்பலகாமம் பிரதேச சபையின் மக்கள் காங்கிரஸின் புதிய உறுப்பினராக இக்பால் நஜீபுள்ளா, இன்று காலை (11) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
 
மக்கள் காங்கிரஸ் உறுப்பினராக செயற்பட்ட முன்னாள் உறுப்பினர் ஆர்.எம்.றெஜீன் பதவி விலகியதையடுத்து, சுழற்சி முறையில், தவிசாளர் ஏ.ஜீ.சம்பிக்க பண்டார முன்னிலையில், அவர் இன்று உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார்.
 
இந் நிகழ்வில், தம்பலகாமம் பிரதேச சபை செயலாளர் திரு. எஸ்.என்.எம். நிஜாம், மக்கள் காங்கிரஸ் சேருவில தேர்தல் தொகுதி அமைப்பாளர் ஆசிரியர் எம்.எஸ். ஐயூப் கான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.