Headlines

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் 7324 குடும்பங்களுக்கு புதிய சமுர்த்தி உறுதிப் பத்திரங்கள்




மூதூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ளவர்களுக்கான புதிதாக தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கான சமுர்த்தி நிவாரண உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

சமூக நலன் புரி மற்றும் ஆரம்ப கைத்தொழில் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இக் குறித்த நிகழ்வு நேற்று (02) மூதூர் பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உறுதிப் பத்திரங்களை வழங்கி வைத்தார் மொத்தமாக சுமார் 7324 புதிய சமுர்த்தி பயனாளிகளுக்கான உரித்து பத்திரங்கள் இதன் போது வழங்கப்பட்டன.

குறித்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லா மஃறூப், க.துறைரட்ணசிங்கம் , மூதூர் பிரதேச செயலாளர் ஏ.எம்.முபாரக் உள்ளிட்ட சமுர்த்தி பயனாளிகள் என பலர் கலந்து கொண்டார்கள்.