Headlines

உலகின் முதல் `செல்பி’




`செல்பி’ புகைப்படம் 175 ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகமாகியுள்ளது.

தன்னைத் தானே புகைப்படம் எடுத்து கொள்ளும் ‘செல்பி’ முறை தற்போது பிரபலமாகி விட்டது. தொலைபேசி- கமெரா மூலம் அவரவர் தங்களை பலவித கோணத்தில் புடகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர்.

ஆனால், இந்த ‘செல்பி’ புகைப்படம் எடுக்கும் முறை கடந்த 175 ஆண்டுக்கு முன்பே அறிமுகமாகி விட்டது. அமெரிக்காவின் பிலாடெல்பியர் நகரில் ராபர்ட் கார்னெலியஸ் என்பவர் கடந்த 1839ஆம் ஆண்டில் முதல் ‘செல்பி’ புகைப்படத்தை எடுத்துள்ளார்.

இவர் தனது தந்தையின் கடையை ‘செல்பி’ முறையில் புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தின் பின்புறத்தில் ‘முதல் செல்பி’ புகைப்படம் என எழுதி வைத்தார்.

இதன் மூலம் அவர் பிரபலமானார். இருந்தாலும் 2 ஆண்டுகளில் தனது தந்தையின் விளக்கு வியாபாரத்தை கவனிக்க தொடங்கினார். கார்னெலியஸ் தந்தை நெதர்லாந்தில் இருந்து குடிபெயர்ந்து அமெரிக்காவில் குடும்பத்துடன் தங்கியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *