Headlines

தூய காங்கிரஸ் அணியினர், தேசிய காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட்டமைப்பில் இணைவு!





-ஊடகப்பிரிவு-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு ஆகியன இணைந்து உருவாக்கிய ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில், முஸ்லிம் காங்கிரஸின் உச்சபீட உறுப்பினரும், அக்கரைப்பற்று மாநகரசபை முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான மௌலவி ஹனீபா மதனி தலைமையில், முஸ்லிம் காங்கிரஸின் உச்சபீட உறுப்பினர் ஆதம்லெப்பை மர்ஜூன் உள்ளிட்ட, தூய காங்கிரஸ் அணியினர் மற்றும் தேசிய காங்கிரஸைச் சேர்ந்த உறுப்பினர்களும் கூட்டமைப்பில் இணைந்து கொண்டனர்.

இன்று மாலை (14)  அக்கரைப்பற்று டி.எப்.சி (TFC) மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முன்னிலையில் தூய காங்கிரஸ் அணி,  ஐக்கிய மக்கள் கூட்டமைப்புடன் இணைந்து கொண்டது.

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *