Headlines

முள்ளிப்பொத்தானை பாலர் பாடசாலைகளின் கலை கலாசார நிகழ்வில் டாக்டர்.ஹில்மி மஹ்ரூப் பங்கேற்பு!





முள்ளிப்பொத்தானையில் உள்ள  05 முன்பள்ளி பாலர் பாடசாலைகள் இணைந்து நடாத்திய வருடாந்த கலை, கலாசார நிகழ்வு, முள்ளிப்பொத்தானை, அல்/ஹிஜ்ரா மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் கடந்த திங்கட்கிழமை (04/12/2017) அன்று இடம்பெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் விவகாரப் பணிப்பாளரும், கிண்ணியா முன்னாள் மேயருமான டாக்டர்.ஹில்மி மஹ்ரூப் இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியதுடன், மாணவர்களுக்கான பரிசில்களையும், சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.

முன்பள்ளி ஆசிரியைகள் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சிறப்பு அதிதிகளாக தம்பலகாமம் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் திருமதி.சந்ராவதி, ஆசிரியர் என்.எம்.சமீம் (ECCD), பாடசாலை அதிபர் மஹ்ரூப், சட்டத்தரணி சபுர்தீன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *