Headlines

சிலவத்துறை சிறுக்குளம் கிராமத்திற்கான குடிநீர் இணைப்பு மக்கள் பாவனைக்கு





அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின்  வேண்டுகோளின் பேரில் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீனினால் மன்னார் சிலாவத்துறை சிறுக்குளம் கிராமத்திற்கான 2000 லீட்டர் கொள்வனவு கொண்ட குடிநீர் தாங்கி மக்கள் பாவனைக்காக இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்,  பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். மேலும் இந்த நிகழ்வில் முன்னாள் முசலி பிரதேச சபை உறுப்பினர் பைரூஸ் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் கிராம மக்கள் போன்றோர் கலந்து சிறப்பித்தார்கள்.

அங்குரார்ப்பண நிகழ்வின் பின்னராக சிருக்குளம் பள்ளி நிருவாகம் மற்றும் ஊர் முக்கியஸ்தர்களுடனான கிராமத்தின் அபிவிருத்தி சம்மந்தமாக கலந்துரையாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ba-jpg2_

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *