Headlines

ஆரையம்பதி பிரதேச பயனாளிகளுக்கு உபகரணம் வழங்கும் நிகழ்வு




பாரம்பரிய கைப்பணிக் கிராமங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் ஆரையம்பதி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு உபகரணம் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.

இந்நிகழ்வு ஆரையம்பதி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதேச செயலக செயலாளர் திருமதி சத்தியானிந்தி, பனை அபிவிருத்தி உத்தியோகத்தர் விஜயன், பிரதி அமைச்சரின் இணைப்பாளர் கண்ணன் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *