Headlines

இலங்கைத்தூதுவர் மீதான தாக்குதல்: வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை




மலேஷியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர்  மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மலேஷியாவுக்கான உயர்ஸ்தானிகர் மீது கோலாலம்பூர் விமான நிலையத்தில் நேற்று இத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான உயர்ஸ்தானிகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
தாக்குதல்களை நடாத்தியவர்களை அடையாளம் காண்பதற்கும் விசாரணைகளை நடாத்துவதற்கும் ஒத்துழைப்பு வழங்குவதற்கும் உயர்ஸ்தானிகர் அலுவலகம் சட்டம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றது. தாக்குதல் தொடர்பில் இராஜதந்திர மட்டத்தில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக  இலங்கை வெளிவிவகார அமைச்சு அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *