Headlines

திருகோணமலை துறைமுகத்தில் சர்வதேச கப்பல்கள்




அமெரிக்காவின் யூ.எஸ்.எஸ் நியூ ஒர்லியன்ஸ் கடற்படை கப்பல் திருகோணமலை துறைமுகத்திற்கு அண்மையில் வந்து சென்றது.

இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் கடற்படை கப்பலான ரெவி நல்லெண்ண பயணமாக திருகோணமலை துறைமுகத்தை வந்துடைந்துள்ளது.

கடற்படையின் பாரம்பரியங்களுடன் குறித்த கப்பலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

மாகாண கடற்படை தளபதி ரியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னய்யாவிற்கும் பிரான்ஸ் கடற்படை கப்பலின் கட்டளையிடும் அதிகாரிக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

எதிர்வரும் 18 ஆம் திகதி வரை திருகோணமலை துரைமுகத்தில் பிரான்ஸ் கப்பல் நிலைகொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *