Headlines

மருதமுனையில் மாபெரும் இரத்ததான முகாம்




மனிதம் பேணும் மகாத்தான பணிக்கு என்ற தொனிப் பொருளில் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் மருதமுனை கிளை நடாத்தும் மாபெரும் இரத்தான முகாம் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை(14-08-2016)காலை 9.00மணிமுதல் மாலை 3.30மணிவரை மருதமுனை மசூர் மொளலானா வீதியில் உள்ள ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் மருதமுனை கிளை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் மருதமுனை கிளை உறுப்பினர்களின் அணுசரணையில் நடைபெறவுள்ள இந்த இரத்ததான நிகழ்வில் கல்முனை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிக்குப் பொறுப்பான டொக்டர்கள் மற்றும் தாதி உத்தியோகத்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதில் அனைவரும் கலந்து கொண்டு இரத்ததானம் செய்யுமாறு ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் மருதமுனை கிளை அழைப்பு விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *