Headlines

டொம் மாலினோவஸ்கி விரைவில் இலங்கை வருகை




ஜனநாயகம் , தொழிலாளர் மற்றும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய அமெரிக்காவின் உதவிச் செயலாளர்  டொம் மலினோவஸ்கி இம்மாதம் 12 தொடக்கம் 20 ஆம் திகதிக்குள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வார் என அமெரிக்க இராஜங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர் இலங்கையின் அரச உயர் அதிகாரிகள் மற்றும் உள்நாட்டு சிவில் சுமூகத்தினரை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்புகளின் போது நீதி மற்றும் நல்லிணக்கம் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்படும் அதேவேளை இந்த செயற்பாடுகளின் முயற்சிகளுக்கு அமெரிக்காவின் ஆதரவு தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *