Headlines

நான்கு பேர் மாத்திரமே சிகிச்சை பெற்று வருகின்றனர்




அவிசாவளை கொஸ்கம சலாவ இராணுவ முகாமில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தால் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் நான்கு பேர் மாத்திரமே இன்னமும் சிகிச்சை பெற்று வருவதாக பாதுக்க வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சலாவ இராணுவ முகாமில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தவர்கள் அவிசாவளை, ஹோமாகம மற்றும் பாதுக்க ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

அவிசாவளை, ஹோமாகம வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட நபர்கள் அனைவரும் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர். எனினும் பாதுக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 33 பேரில் நால்வர் மாத்திரம் இன்னமும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *