Headlines

அ.இ.ம.கா. வின் திகாமடுல்ல கூட்டம்!




– அப்துல் அஸீஸ் ​-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் (அம்பாறை மாவட்டத்தில்) போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கட்சியியின் விஷேட கூட்டம் (23) மாலை அதன் செயலாளர் நாயகத்தின் கல்முனை அலுவலகத்தில் இடம்பெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட்டின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகளை தொகுதிகள் ரீதியாகவும், பிரதேசம்கள் ரீதியாகவும் விஸ்தரித்து முன்னெடுப்பது தொடர்பாகவும், தேர்தல் கால சட்டதிட்டம்களை கடைபிடிப்பது தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டதுடன்,

எதிர்வரும் சனி, ஞாயிறு ஆகிய தினங்களில்அம்பாறை மாவட்டத்தின் பல இடம்களில் இடம் பெறவுள்ள தேர்தல் பிரச்சார கூட்டம்களில் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் கலந்துகொள்ளும் விடயமும் கலந்துரையாடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *