Headlines

ஆசாத் சாலிக்கு தேசிய பட்டியல் – ரணில் உறுதி




ஆசாத் சாலிக்கு தேசிய பட்டியல் வழங்க ரணில் விக்கிரமசிங்க உறுதிமொழி வழங்கியுள்ளார். சற்றுமுன்னர் சிறிகொத்தாவில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த உறுதிமொழி தனக்கு வழங்கப்பட்டதாக ஆசாத் சாலி இணையத்திடம் தெரிவித்தார்.

முழு நாட்டிற்கும் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்ற நோக்கத்திற்காகவே தனக்கு இவ்வாறு தேசியப் பட்டியல் வழங்கப்பட்டுள்ளதாக சொன்ன ஆசாத் சாலி, ஐக்கிய தேசியக் கட்சியுடனான இந்த கலந்துரையாடலில் ரவி கருணாநாயக்கா மற்றும் மலிக் சமரவிக்கிரம ஆகியோர் உடனிருந்ததாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் இதுதொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி விரைவில் உத்தியோகபுர்வ அறிவிப்பை வெளியிடுமெனவும் அவர் ஆசாத் சாலி மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *