Headlines

பம்பலப்பிட்டியில் ஏற்பட்ட அதிர்வு தொடர்பாக ஆராய்வு




கொழும்பு பம்பலபிட்டி பகுதியை அண்மித்த பகுதியில் ஏற்பட்ட அதிர்வு , நிலநடுக்கமா என்பது தொடர்பில் கண்டறிவதற்கான ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

பம்பலபிட்டி பகுதியில் நேற்று மாலை நான்கு மணியளவில் மூன்று தடவைகள் அதிர்வுகள் ஏற்பட்டதை தாம் உணர்ந்ததாக அப் பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர்.
அதிர்வுகள் உணரப்பட்டதை அடுத்து பாதுகாப்பான இடத்திற்கு தாம் சென்றதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
இந்த விடயம் தொடர்பில் புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
பம்பலபிட்டி பகுதியில் சிறு அளவில் ஏற்பட்டுள்ள அதிர்வினால் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை எனவும் இந்த விடயம் குறித்து பல வீடுகளிலிருந்து தகவல் கிடைத்துள்ளதாகவும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *