ரோஹிங்கிய அகதிகள் தொடர்பில் தலைவர் ரிஷாட் ஜனாதிபதிக்கு கடிதம்!
இலங்கையில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கியர்கள் தொடர்பில், சர்வதேச சட்டத்துக்கு அமைய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தலைவர் ரிஷாட் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்! கடந்த டிசம்பர் மாதம் இலங்கையில் தஞ்சமடைந்துள்ள மியன்மார் நாட்டின் ரோஹிங்கியா அகதிகள் தொடர்பில், சர்வதேச சட்டத்துக்கு அமைய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். மேற்படி கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, (கடிதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு) கௌரவ ஜனாதிபதி அவர்களுக்கு, இலங்கையில் புகலிடம் கோரி வரும் ரோஹிங்கியா…
