Headlines

‘பிஞ்சு மனம்’ சிறுகதை நூல் வெளியீட்டு விழா!

வெலிகம, ரிம்ஸா முஹம்மத் எழுதிய ‘பிஞ்சு மனம்’ சிறுகதை நூல் வெளியீட்டு விழா, ஞாயிற்றுக்கிழமை (05) கொழும்பு, தமிழ்ச் சங்கத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தார்.

Read More

ஏறாவூர், ஓட்டுப்பள்ளி பிரதேச முக்கியஸ்தர்களுடனான ஒன்றுகூடல்!

ஏறாவூர், ஓட்டுப்பள்ளி பிரதேச முக்கியஸ்தர்களுடனான சினேகபூர்வ சந்திப்பொன்று ஞாயிற்றுக்கிழமை (05) இடம்பெற்றது. இவ் ஒன்றுகூடல் நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான M.S.S. அமீர் அலி மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினரும் கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சருமான M.S. சுபைர் உள்ளிட்ட பிரதேச முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

அனுராதபுர மாவட்ட முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு!

உள்ளூராட்சி மன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது குறித்தும் விரிவாக ஆராய்வு! அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட முக்கியஸ்தர்களுடனான சந்திப்பொன்று, கட்சியின் உயர்பீட உறுப்பினரும் அனுராதபுர மாவட்டத் தலைவருமான A.R.M.தாரிக் ஹாஜியாரின் தலைமையில் இடம்பெற்றது. ஞாயிற்றுக்கிழமை (05), அவரது இல்லத்தில் இடம்பெற்ற மேற்படி கலந்துரையாடலில், கட்சியின் முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள், பிரதேசவாசிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர். எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், அனுராதபுரம் மாவட்டத்தில் எவ்வாறு கட்சியின் செயற்பாடுகளை அமைத்துக்கொள்வது மற்றும் எதிர்காலத்தில் கட்சியின் முன்னெடுப்புக்கள் எவ்வாறு…

Read More

வவுனியா றவ்ழத்துல் ஜன்னா மற்றும் அல் அக்ஸா முன்பள்ளிகளின் பரிசளிப்பு விழா – முத்து முஹம்மட் எம்.பி பங்கேற்பு!

வவுனியா, புதிய சாளம்பைக்குளம் றவ்ழத்துல் ஜன்னா முன்பள்ளி மற்றும் சாளம்பைக்குளம் அல் அக்ஸா முன்பள்ளி ஆகியவற்றின் வருடாந்த பரிசளிப்பு விழாக்கள் ஞாயிற்றுக்கிழமை (05) இடம்பெற்றன. மழலைகளின் கலை நிகழ்வுகளுடன் ஆரம்பமான இவ் விழாக்களில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான முத்து முஹம்மட் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்ததுடன், சிறார்களுக்கான பரிசில்களையும் வழங்கி வைத்தார்.

Read More