Headlines

குருநாகல் மாவட்டத்தில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பு!

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட எம்.டீ.எம்.முஸம்மில் அவர்களுக்கு, வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு, சனிக்கிழமை (04) கல்கமுவ, வல்பாலுவ பகுதியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், குருநாகல் மாவட்ட அமைப்பாளரும் ஓய்வுபெற்ற அதிபருமான எம்.டீ.எம்.முஸம்மில், கட்சியின் உயர்பீட உறுப்பினர்களான இர்பான், அஷார்டீன் மற்றும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அஷாட் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள், ஊர்ப்பிரமுகர்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

கிண்ணியா, அல் முனவ்வரா பாலர் பாடசாலை பரிசளிப்பு விழா – பிரதம அதிதியாக Dr.ஹில்மி மஹ்ரூப் பங்கேற்பு!

கிண்ணியா, பெரியாற்றுமுனை அல் முனவ்வரா பாலர் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா, சனிக்கிழமை மிகச் சிறப்பாக (04) இடம்பெற்றது. இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் கிண்ணியா நகர சபையின் முன்னாள் மேயருமான Dr.ஹில்மி மஹ்ரூப் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறார்களுக்கான பரிசில்களை வழங்கிவைத்தார். இதன்போது, கிண்ணியா பிரதேச செயளாலர் ஜனாப் கனி மற்றும் முக்கியஸ்தர்களும் விழாவில் கலந்து சிறப்பித்திருந்தனர்.

Read More

புத்தளம், கரைத்தீவு “ரிஷாட் பதியுதீன்” முன்பள்ளி பரிசளிப்பு விழா!

பிரதம அதிதியாக புத்தளம் மாவட்ட அமைப்பாளர் N.T.M.தாஹிர் பங்கேற்பு! புத்தளம், கரைத்தீவு “ரிஷாட் பதியுதீன்” முன்பள்ளியின் வருடாந்த பரிசளிப்பு விழா, சனிக்கிழமை (04) முன்பள்ளி வளாகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான N.T.M.தாஹிர் மற்றும் கட்சியின் கரைத்தீவு உறுப்பினர் ஷிபான் உட்பட முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர்.

Read More

அல்-ஹிக்மா முன்பள்ளி விளையாட்டு விழா – பிரதம அதிதியாக தாஹிர் எம்.பி பங்கேற்பு!

நிந்தவூர் பிரதேச சபையின் பராமரிப்பில் இயங்கிவரும் அல் – ஹிக்மா முன்பள்ளி பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா, பாடசாலை வளாகத்தில் (04) இடம்பெற்றது. நிந்தவூர் பிரதேச சபை செயலாளர் எஸ்.ஷிஹாபுத்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு விழாவினை ஆரம்பித்து வைத்தார். அத்துடன், போட்டியில் பங்குபற்றிய மாணவர்களுக்கான பரிசில்களையும், விடுகை பெற்று செல்லும் மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பரிசில்களையும் வழங்கிவைத்தார். இதன்போது,…

Read More