Headlines

மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட செயற்குழுக் கூட்டம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின், புத்தளம் மாவட்ட செயற்குழுக் கூட்டம், திங்கட்கிழமை (09) தில்லையடியில் இடம்பெற்றது. கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்து, விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இதன்போது, கடந்த பாராளுமன்றத் தேர்தலில் புத்தளத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களான N.T.M.தாஹிர், M.H.முஹம்மத் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தமை…

Read More

புத்தளம் இஸ்லாஹிய்யாவுக்கு தளபாடங்கள் வழங்கி வைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் (முன்னைய அரசாங்கத்தின்) பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து, புத்தளம் – 05ஆம் வட்டார அமைப்பாளர் எம்.எம்.எம்.முர்ஷித்தின் வேண்டுகோளின் பேரில், புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரிக்கு, 430,000 ரூபாய் பெறுமதியில், Smart Class வகுப்பறைகளுக்கான தளபாடங்கள் திங்கட்கிழமை (09) கையளிக்கப்பட்டன. இந்நிகழ்வில், மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் மற்றும் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் புத்தளத்தில் போட்டியிட்ட வேட்பாளர் எம்.எச்.முஹம்மத், 07ஆம் வட்டார அமைப்பாளர் ரஸீன் ஆசிரியர், இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியின் முகாமைத்துவ சபைத் தலைவர்…

Read More

நிந்தவூர் பிரதேச சபைக்கு தாஹிர் எம்.பி விஜயம்..!

பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிரின் அரசியல் பயணத்தில் மிக முக்கிய பங்கு வகித்த நிந்தவூர் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக, இன்றைய தினம் (09) பிரதேச சபைக்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். இதன்போது, பிரதேச சபையின் செயலாளர், முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர். இங்கு கருத்து தெரிவித்த அஷ்ரப் தாஹிர் எம்.பி, “நான் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இங்கு வந்து நிற்பதற்கு…

Read More

நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு தாஹிர் எம்.பி விஜயம்!

பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் மற்றும் நிந்தவூர் பிரதேச செயலாளர் ஏ.எல்.அப்துல் லதீப் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று, இன்று (09) நிந்தவூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது, அனர்த்த நிவாரணம், அஸ்வெசும கொடுப்பணவு, பள்ளி நிர்வாக சர்ச்சை மற்றும் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரி விவகாரம் உள்ளிட்ட இன்னோரான்ன விடயங்கள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. குறிப்பாக, எந்தவொரு அரசியல் தலையீடுகளுமின்றி நிந்தவூர் பெரிய பள்ளிவாயல் மற்றும் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரி நிர்வாகத் தெரிவுகளை நடாத்துமாறு, பிரதேச செயலாளர் மற்றும்…

Read More

மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட செயற்குழுக் கூட்டம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் திருகோணமலை மாவட்ட செயற்குழுக் கூட்டம், ஞாயிற்றுக்கிழமை (08) உப்புவெளி, சர்வோதயபுர மண்டபத்தில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில், கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டதுடன், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் திருமலை மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர் வைத்தியர் ஹில்மி மஹ்ரூப் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர் வைத்தியர் ஹில்மி முகைதீன் பாவா உட்பட கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வயல் பிரதேசங்களை பார்வையிட்டார் தாஹிர் MP!

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வயல் பிரதேசங்களை (08) நேரில் சென்று பார்வையிட்டார் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர். அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிப்புக்குள்ளான வயல் நிலங்கள், வடிச்சல் வாய்க்கால் மற்றும் சிதைவுகளுக்குள்ளான வீதிகள் போன்றவற்றை நேரில் சென்று கள ஆய்வினை மேற்கொண்டிருந்தார். இதன்போது, குறித்த பிரச்சனைகளுக்கான தீர்வுகள் குறித்து விவசாயிகள், வட்டை விதானைமார் ஆகியோரிடம் கேட்டறிந்து கொண்டதுடன் சிதைவுக்குள்ளாகி வரும் வீதிகளை செப்பனிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.

Read More

அனுராதபுரத்தில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பு!

கடந்த பாராளுமன்றத் தேர்தலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக  அனுராதபுரத்தில் போட்டியிட்ட ஏ.ஆர்.எம்.தாரிக் ஹாஜியாருக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு, சனிக்கிழமை (07) இடம்பெற்றது. அனுராதபுரம், நாச்சியாதுவவில் உள்ள ஏ.ஆர்.எம்.தாரிக் ஹாஜியாரின் இல்லத்தில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில், கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

Read More