Headlines

திருகோணமலையில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பு!

கடந்த பாராளுமன்றத் தேர்தலில்,  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர் வைத்தியர்.ஹில்மி மஹ்ரூபுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு, சனிக்கிழமை (21) கிண்ணியாவில், அவரது இல்லத்தில் இடம்பெற்றது.   இந்நிகழ்வில், மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் உட்பட கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.

Read More

VIDEO- மியன்மார் ரோஹிங்யா அகதிகளை பார்வையிட்டார் தலைவர் ரிஷாட்!

முல்லைத்தீவு, முள்ளிவாய்கால் மேற்கு கடற்கரைப் பகுதியில், மியன்மாரில் இருந்து சுமார் 115 ற்கு மேற்பட்ட அகதிகள், கடந்த வாரம் கரையொதுங்கியதையடுத்து, அவர்கள் திருகோணமலை அஷ்ரப் இறங்குதுறைக்கு கொண்டுசெல்லப்பட்டு பின்னர், திருகோணமலை ஜமாலியா பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.  குறித்த, மியன்மார், ரோஹிங்யா அகதிகளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் பராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் ஆகியோர், சனிக்கிழமை (21) திருகோணமலை, ஜமாலியா பாடசாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.  அடிப்படை வசதிகள் கூட…

Read More

புத்தளம் மதரஸதுல் நபவியாவுக்கு இலத்திரனியில் சாதனங்கள் மற்றும் கதிரைகள் வழங்கி வைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் (முன்னைய அரசாங்கத்தின்) பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து, புத்தளம் அல் மதரஸதுல் நபவியாவுக்கு சுமார் 2 இலட்சம் ரூபா பெறுமதியான கதிரைகள், ஸ்மார்ட் TV (LED) மற்றும் சவுண்ட் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட செயற்குழுவினால், மதரஸாவின் வருடாந்த பரிசளிப்பு விழாவின்போதே மேற்படி உபகரணங்கள், உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன. இந்நிகழ்வின், விசேட அதிதியாக வைத்தியர் திருமதி.திபாயா பங்கேற்றிருந்ததுடன், மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்களான…

Read More