‘திகாமடுல்ல மாவட்டத்தில் இரண்டு ஆசனங்களை கைப்பற்றுவோம்’ – மக்கள் காங்கிரஸ் வேட்பாளர் சலீம்!
எதிர்வரும் பொதுத்தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் எமது கட்சி இரண்டு ஆசனங்களை கைப்பற்றும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் மூன்றாம் இலக்கத்தில் போட்டியிடும் முன்னாள் அரச நிருவாக சேவை உத்தியோகத்தரும், வேட்பாளருமான ஏ.எல்.எம்.சலீம் தெரிவித்தார். சாய்ந்தமருது பிரதேசத்தில், அவரது கட்சி காரியாலயத்தை திறந்து வைத்து (21) மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து அவர் தனது உரையில் திகாமடுல்ல மாவட்டத்தில் இம்முறை பல புது முகங்கள் களமிறங்கியிருப்பதால் போட்டித் தன்மையை காணப்படுகிறது….
