Headlines

“அருள் நிறைந்த புனித ரமழானின் பாக்கியம் சகலருக்கும் கிடைக்கட்டும்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

அருள் நிறைந்த ரமழானின் பாக்கியங்களை அடையும் சந்தர்ப்பத்தை எல்லாம் வல்ல அல்லாஹுத்தஆலா சகலருக்கும் வழங்க வேண்டுமென பிரார்த்திப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். புனித ரமழானை வரவேற்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, “அல்லாஹ்வின் அருட்கடாட்சம் கிடைக்கும் புனிதமிக்க பெறுமதியான ரமழான் எம்மை நெருங்கியுள்ளது. இம்மாதத்தில் நல்லமல்கள் செய்து புனிதவான்களாக மாறுவதற்கு முயற்சிப்போம். அல்லாஹ்வுடன் நேரடியாக அடியானை இணைக்கும் ஆத்மீக உணர்வே நோன்பு. நோன்பாளியின் பிரார்த்தனைகள் வீண்போவதில்லை. இன்னொரு…

Read More

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் – மக்கள் காங்கிரஸ் தவிசாளர் அமீர் அலி சந்திப்பு!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொன்டமான் மற்றும் மக்கள் காங்கிரஸ் தவிசாளரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான MSS.அமீர் அலி ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்றைய தினம் (04) ஆளுநர் அலலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது, மீராவோடை அல்ஹிதாயா மகா வித்தியாலயத்தின் கணித, விஞ்ஞானப் பிரிவில் காணப்படும் ஆளணிப் பற்றாக்குறை மற்றும் பாடசாலையில் காணப்படும் பௌதீக வளப்பற்றாக்குறை குறித்து தவிசாளர் அமீர் அலி எடுத்துரைத்தார். பாடசாலை தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட ஆளுநர், கூடிய விரைவில் அவற்றுக்கான தீர்வுகளைப்…

Read More

மக்கள் காங்கிரஸின் ஏறாவூர் மத்தியகுழு புனரமைப்புக் கூட்டம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஏறாவூர் மத்தியகுழு புனரமைப்புக் கூட்டம் இன்றைய தினம் (03) முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் M.S.சுபைர் தலைமையில் ஏறாவூரில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில், கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் தவிசாளர் அமீர் அலி, பிரதி செயலாளர் நாயகம் M.A.அன்சில், பிரதி தேசிய அமைப்பாளர் M.A.M.தாஹிர் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

Read More

மர்ஹும் ஏ.ஆர்.எம்.ஜிப்ரியின் 4ஆவது நினைவு தினமும் நூல் அறிமுக நிகழ்வும் – பிரதம அதிதியாக தலைவர் ரிஷாட் பங்கேற்பு!

இலங்கை ஒலிபரப்பாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், சிரேஷ்ட ஒலி-ஒளிபரப்பாளர் மர்ஹூம் ஏ.ஆர்.எம்.ஜிப்ரியின் நான்காவது வருட நினைவு தின நிகழ்வும், ‘ஏ.ஆர்.எம்.ஜிப்ரி ஒரு சகாப்தம்’ எனும் நூல் அறிமுக நிகழ்வும் இன்று (03) மாளிகைக்காடு, பாபா ரோயலி வரவேற்பு மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது. இலங்கை ஒலிபரப்பாளர் ஒன்றியத்தின் தலைவரும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளருமான சிரேஷ்ட ஒலி – ஒளிபரப்பாளர் யூ.எல்.யாகூப் தலைமையில், சர்வதேச புகழ் ஒலிபரப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத் முன்னிலையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்…

Read More

புளிச்சாக்குளம் சிடார் விளையாட்டுக்கழக மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வு!

புத்தளம், புளிச்சாக்குளம் சிடார் விளையாட்டுக்கழகம் நடாத்தும் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வுகள், இன்று ஞாயிற்றுக்கிழமை (03) புளிச்சாக்குளம் உமர் பாரூக் மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இதன்போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, இறுதிநாள் நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார். மேலும், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.டி.எம்.தாஹிர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான ஆசிக், பைசல் மரைக்கார், நிஜாம் மற்றும் அதிபர் சரீக், இணைப்பாளர் இர்ஷாட், மர்சூன் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர்.

Read More