February 2021
சிறுபான்மை சமூகங்களின் அடக்குமுறைக்கு எதிரான எழுச்சிப் பேரணி கிண்ணியாவின் ஊடாக!
சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்த்தும், கண்டித்தும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி, இரண்டாவது நாளாக நேற்று (04) மாலை மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை, கிண்ணியாவை வந்தடைந்தது. இவ் எழுச்சிப் பேரணியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் உட்பட சிவில் சமூக பிரதிநிதிகள், பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு, தமது ஆதரவை தெரிவித்தனர்.
‘சுதந்திரம் யாருக்கோ என எண்ணுமளவில் சிறுபான்மையினர்’ – சுதந்திரதின செய்தியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!
இலங்கைக்கு கிடைத்த சுதந்திரத்தின் உண்மையான அர்த்தங்களை சகல சமூகங்களும் அனுபவிக்காத ஒரு சூழ்நிலையில், சிறுபான்மைச் சமூகங்கள் நாளைய கொண்டாட்டங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடனே பார்ப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். நமது நாட்டின் சுதந்திர தினம் குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “நமது நாட்டுப் பிரஜைகள் ஒவ்வொருவரும் அரசியல், மதம், சமூக, பொருளாதார, வாழ்வியல் உரிமைகளை சுதந்திரமாக அனுபவிக்கவே வெளிநாட்டுச் சக்திகளிடமிருந்து நாட்டை மீட்கப் போராடினர். இந்தப் போராட்டத்தில்…
