முடக்கப்பட்ட பிரதேசத்திற்கான கொடுப்பனவுகளை வழங்குமாறு அரசிடம் கோரிக்கை; கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம்.எம்.மஹ்தி!
கிண்ணியா பிரதேசத்தில் கொரோனா தொற்று காரணமாக முடக்கப்பட்ட மாஞ்சோலை கிராம மக்களுக்கு அரச கொடுப்பனவுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் காங்கிரஸின் கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.எம்.மஹ்தி, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் நேற்று (17) கிண்ணியா பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் கூறியதாவது, “கடந்த 8 நாட்களாக முடக்கப்பட்டிருக்கும் இப்பிரதேசத்தில், 857 குடும்பங்களை சேர்ந்த 3187 பேர் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். அன்றாடம் தொழில் செய்வதன்…
