Headlines

“சுதந்திர தின கிண்ணம்” 2019 கிரிகட் சுற்றுத் தொடரின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம விருந்தினராக ஹஸீப் மரிக்கார்

தர்கா நகர் “ரெட் எபல்” (Red Apple) கிரிகட் கழக ஏற்பாட்டில் நடைபெற 12 கிரிகட் கழகங்கள் பங்குபற்றும், “சுதந்திர தின கிண்ணம்” (Independent Champions Trophy-2019) கிரிகட் சுற்றுத் தொடரின் அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த (02) காலை தர்கா நகர் பாகிர் மாகார் மைதானத்தில் நடைபெற்றது. இதன் அங்குரார்பண ஆட்டத்தில் தர்கா நகர் “ரெட் ஸ்டார்” (Red Star) மற்றும் “ஸஹிரியன்ஸ்” (Zahirians) கழகங்கள் மோதியது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக அகில இலங்கை மக்கள்…

Read More

பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட பெவிலியன் கையளிப்பு

ஹிதோகம அ/கலுவில சேன மகா வித்தியாலயத்தில் 2 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்ட பெவிலியன் பாடசாலைக்கு கையளிக்கப்பட்டது. 2019.02.01ஆம் திகதி பாடசாலையில் நடைபெற்ற இல்ல விளையாட்டு போட்டியில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் இதனை திரை நீக்கம் செய்து வைத்தார். இதற்கான நிதியினை பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து மேற்கொண்டிருந்தார். பாடசாலை அதிபர் தலைமையில் இந்த நிகழ்வில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அகில இலங்கை…

Read More

குளியாப்பிடிய நகர மண்டபத்தில் நடைபெற்ற கைவினைத் தொழிற்துறை கண்காட்சி விழா

சுதேச கைவினைத் துறையினை போஷித்து பேணிப்பாதுகாக்கும் நோக்குடன் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான தேசிய அருங்கலைகள் பேரவை ஏற்பாடு செய்த ”சில்ப அபிமானி – 2018” கைவினைத் தொழிற்துறை கண்காட்சி விழா இன்று (31) குளியாப்பிடிய நகர மண்டப வளாகத்தில் நடைபெற்றது. கைத்தொழில் வர்த்தக அமைச்சரும் தேசிய தலைவருமான ரிஷாட் பதியுதீனின் பணிப்புரையின் கீழ் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னால் மாகாணசபை உறுப்பினரும் சதொச பிரதி தலைவரும் குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் மாவட்ட…

Read More

அனுராதபுரம் கஹட்டகஸ்திகிலிய முஸ்லிம் மகா வித்தியாலய இல்லைவிளையாட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக இஷாக் ரஹ்மான் கலந்துகொண்டார்…

அ/கஹட்டகஸ்திகிலிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 2019.01.31 அன்று நடைபெற்ற இல்ல விளையாட்டு போட்டி நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் கலந்துகொண்டு விளையாட்டு நிகழ்வுகளில் வெற்றியீட்டிய சில மாணவர்களுக்கு கிண்ணங்களையும், சான்றிதல்களையும் வழங்கி வைத்தார். இதன்போது குறித்த பாடசாலையில் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்ட சுற்று மதிலும் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானினால் திறந்து வைக்கப்பட்டது. வவுனியா இறம்பைக்குளம் பெண்கள் தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல…

Read More

கிண்ணியா பாதிமா பாலிகா மகாவித்தியாலயத்தில் கௌரவிப்பும் அபிவிருத்தி நிகழ்வுகளும்

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா கல்வி வலயத்துக்குட்பட்ட முள்ளிப் பொத்தானை தி/கிண்ணியா பாத்திமா பாலிகா மகாவித்தியாலயத்தின் சுற்றுமதில் மற்றும் பாடசாலை கொங்ரீட் வீதி என்பன இன்று (31) துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஹரூப் அவர்களால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. பிரதியமைச்சரின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இருபது இலட்சம் ரூபா செலவில் குறித்த வீதி,பாடசாலைக்கான சுற்றுமதில் என்பன திறந்து வைக்கப்பட்டதுடன் மேலதிகமாக போட்டோ கொப்பி இயந்திரம் ஒன்றும் கையளிக்கப்பட்டது….

Read More

மன்னார் எருக்கலம்பிட்டி மகளீர் மகா வித்தியாலயத்திற்கு போட்டோ பிரதி இயந்திரம் வழங்கிவைக்கும் நிகழ்வில் பங்கேற்ற றிப்கான் பதியுதீன்…..

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தகம் நீண்டநாள் இடம்பெயர்ந்தோருக்கான மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் எருக்கலம்பிட்டி மகளீர் மகா வித்தியாலயத்திற்கான போட்டோ பிரதி இயந்திரம் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் நடைபெற்றது அதிபர் அஸ்மீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது . இந்நிகழ்வின் பிரதம அதிதியாக அமைச்சரின் பிரத்தியோக செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் அவர்களும் மன்னார் பிரதேச சபை தவிசாளர்…

Read More

கிராமம் ,நகரம் என்ற பேதமின்றி பாடசாலை வளப்பகிர்வு இடம்பெற வேண்டும்; வவுனியாவில் அமைச்சர் ரிஷாட் !

“பாடசாலைக்கு தேவையான கட்டிடங்களையும் ,வளங்களையும், அடிப்படை தேவைகளையுமே அரசியல் வாதிகளால் பெற்றுத்தரமுடியும். கல்வித்தரத்தை அதிகரிக்க செய்வதும்  மாணவர்களை ஒழுக்க சீலர்களாக மாற்றியமைப்பதும்,ஆசிரிய சமூதாயத்தின் பெரும் பொறுப்பாகும்.” இவ்வாறு  அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.  வவுனியா முஸ்லிம்  மகா வித்தியாலயத்தில் அதிபர் எம். எஸ் .ரம்சீன் தலைமையில் இடம்பெற்ற மூன்று மாடிக்கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதம விருந்தினராக இன்று (31)அமைச்சர் கலந்து கொண்டு உரையாற்றினார்.  வவுனியா தெற்கு வலயக்கல்விப்பணிப்பாளர் ராதா கிருஷ்ணன் மற்றும் அரசியல் முக்கியஸ்தர்களான முத்து முஹம்மது,தாஹிர் மௌலவி, பாரி ,லரிப்…

Read More

வவுனியா குப்பை பிரச்சினையை தீர்க்க அமைச்சரவைக்கு கூட்டு அமைச்சரவை பத்திரம் -அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு!

வவுனியா பம்பைமடு குப்பை மேட்டு பிரச்சினைக்கு மாற்று  தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையில் தானும் அமைச்சர் வஜிர அபேவர்தனவும் இணைந்து கூட்டு அமைச்சரவை பத்திரம் ஒன்றை தாக்கல் செய்து,  பொருத்தமான இடத்தில்  குப்பைகளை கொட்டும் மாற்று திட்டம் ஒன்றை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவிருப்பதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.  வவுனியாவில் இன்று காலை (31)அரச அதிபர் காரியாலயத்தில் அரசாங்க அதிபர் ஹனிபா , மேலதிக அரச அதிபர் மற்றும் நகர சபை,பிரதேச சபை தலைவர்கள் உட்பட அதிகாரிகள் ஆகியோருடன்   இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர்…

Read More

கருணாவின் குற்றச்சாட்டு வேடிக்கையானது.கிழக்கு ஆளுநரை நியமித்தது பிரதமர் அல்ல; ஜனாதிபதியே ராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி !!!

கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வின் நியமன விடயத்தில் கருணா அம்மான் சம்பந்தன் ஐயாவையும் சுமந்திரனையும் குற்றம் சாட்டிவருவது வேடிக்கையானது.ஆளுநரை நியமதித்தது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அல்ல.அவரது கட்சியின் தலைவரான ஜனாதிபதியே என கிராமிய பொருளாதார அபிவிருத்தி மற்றும் விவசாய நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். வெல்லாவெளியில் இடம்பெற்ற வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசும்போதே இவ்வாறு தெரிவித்தார். இவ் வைபவத்தில் முன்னாள்…

Read More

படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் – ஹிஸ்புல்லா ஆகியோருக்கு இடையில் பேச்சு!

திருகோணமலையில் படையினர் வசமுள்ள தனியார் காணிகள், மதஸ்தலங்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிப்பது தொடர்பில், கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மற்றும் துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் ஆகியோருக்கிடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இன்று புதன்கிழமை திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் இம்பெற்ற சந்திப்பில், இவர்கள் பேசிக் கொண்டனர். இதன்போது ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைய, திருகோணமலையில் படையினர் வசமுள்ள தனியார் காணிகள், மதஸ்தலங்களுக்கு சொந்தமான காணிளை விடுவிப்பது தொடர்பில், பிரதியமைச்சர் ஆளுநருக்கு எடுத்துக்…

Read More

பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் வீதிப் புனரமைப்பு பணிகளை திறந்துவைத்தார்…..

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரசேச சபைக்குட்பட்ட துளசிபுரத்தில் 30 இலட்சம் ரூபா பெறுமதியான கொங்ரீட் வீதி உட்பட வடிகான் போன்றன நேற்று திங்கட் கிழமை துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் கௌரவ அப்துல்லா மஹ்ரூப் அவர்களால் திறந்து மக்கள் பாவனைக்கு விடப்பட்டது. இது போன்று கப்பல் துறையில் 450 மீற்றர் தூரமான கொங்ரீட் மற்றும் கிரவல் வீதிகள் செப்பணிடப்பட்டு மக்கள் பாவனைக்கு விடப்பட்டது. அக்போபுர,நெல்சன்புர வீதி கொங்ரீட் வீதியாக மாற்றியமைத்து பிரதியமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது.மக்கள்…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மூலம் மாகோ, ரந்தனிகம குளத்தில் நன்னீர் மீன் வளர்ப்பு.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் விவசாய கிராமிய பொருளாதார மற்றும் நீர்பாசன கால்நடை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான அமீர் அலியின் நிதியொதுக்கீட்டில். குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் அமைப்பாளரும் முன்னால் மாகாணசபை உறுப்பினருமான எம்.என்.நஸீர் (MA) யின் ஆலோசனையில் குருநாகல் மாவட்ட முஸ்லிம் கிராமங்களில் உள்ள குளங்களுக்கு நன்னீர் மீன்களை விடும் திட்டம் அன்மையில் ஆரம்பமானது. அதன்படி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மாகோ பிரதேசசபை உறுப்பினர் அபூ தாலிபின் வேண்டுகோளுக்கினங்க.இதன் ஆறாவது கட்டமாக மாகோ,…

Read More