Headlines

வெள்ளாங்குள பிரதேச  மக்களின் பரிதாபம்! ஆசைகாட்டி ஏமாற்றப்பட்டிருப்பதாக   குமுறல்!

சுமார் எட்டு வருடங்களுக்கு முன்னர் (இந்திய வீடுகள்)  என்ற ஒரு திட்டத்தில் சேவா கிராமம் , கணேசபுரம், இந்திய வீடமைப்பு கிராமம்  என்ற பெயர்களில்  நாங்கள் குடியமர்த்தப்பட்ட போதும் இற்றை வரை எங்களுக்கு உறுதியோ, பெர்மிட்டோ வழங்கப்படவில்லையேன்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியூதீனிடம் பாதிக்கப்பட்ட  ஊர் மக்கள் முறையிட்டனர். மன்னார் வெள்ளாங்குளம் , தேவன்பிட்டி கிராமத்திற்கு சென்றிருந்த  அமைச்சரை , சந்திக்க வந்த  இந்த அயற்கிராம மக்கள் வாழ்க்கையில் தாம் பட்டுவரும் அவஸ்தைகளையும் அவலங்களையும் அமைச்சரிடம் வேதனையுடன் விபரித்தனர். “இந்த மூன்று கிராமங்களில்…

Read More

பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் மூலமாக நொச்சியாகம வல்பொல கிராம மக்களுக்கான குடிநீர் விநியோக திட்டம்!!!

அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதித்தலைவருமான இஷாக் ரஹ்மான் மூலமாக நொச்சியாகம வல்பொல கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்களின் நீண்டகால பிரச்சினையாக இருந்த குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் முகமாக குடிநீர் விநியோக திட்டத்தினை (2019.02.11) ஆரம்பித்துவைத்தார்… இந்த நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தர்கள், ஊர் பிரமுகர்கள், கிராம மக்களும் கலந்துகொண்டனர்.

Read More

குச்சவெளி பிரதேச செயலகத்திட்குட்பட்ட பிரதேச அபிவிருத்தி தொடர்பான மீளாய்வும் 2019 ம் ஆண்டுக்கான நடை முறைப்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்!!!

குச்சவெளி பிரதேச செயலகத்திட்குட்பட்ட பிரதேச அபிவிருத்தி தொடர்பான மீளாய்வும் 2019 ம் ஆண்டுக்கான நடை முறைப்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (12) செவ்வாய்க் கிழமை குச்சவெளி பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச செயலாளர் தனேஸ்வரன் தலைமையில் நடை பெற்றது. குறித்த கலந்துரையாடலானது திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவரும் துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் அவர்களின் பங்கேற்புடன் இடம் பெற்ற இக் கலந்துரையாடலில் பல்வேறு திட்டங்கள்…

Read More

கம்பளை முஸ்லீம் மகா வித்தியாலயத்தின் 85 ஆவது ஆண்டு நினைவு தின விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாக றிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார் !!!

கம்பளை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 85ஆவது ஆண்டு நினைவு விளையாட்டு போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் (11) கலந்து கொணடார். பாடசாலையின் அதிபர் டி எம் எப் மூவி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் பிரதியமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப், கட்சியின் கண்டி மாவட்ட இணைப்பாளர் ரியாஸ் இஸ்ஸதீன், கண்டி மாவட்ட அமைப்பாளர் ஹம்ஜத் ஹாஜியார் மற்றும்…

Read More

அகில இலங்கை மக்கள் காங்ரஸினால் சம்மாந்துறையில் பல அபிவிருத்தி திட்டங்கள்.

அகில இலங்கை மக்கள் காங்ரஸ் தலைவரும், அமைச்சருமான கௌரவ ரிசாத் பதியுத்தீன் அவர்களினால் சம்மாந்துறையில் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில், 01. சம்மாந்துறை பிரதேச சபைக்குட்பட்ட வீரமுனை வட்டாரத்தில் முதலாம் கட்டமாக 3.8 மில்லியன் ரூபாய் செலவில் சகல வசதிகள் கொண்ட பொது நூலகத்துக்கான வேலைத்திட்டம் ஆரம்பிப்பு. 02. அதே போல் 20 வருடங்களுக்கு மேலாக இனங்காணப் படாமல் இருந்த கல்வெட்டுடன் இனைந்த Ampara Road,12B, 1st Crosse Lane  பாதை அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் முன்னெடுப்பு. 03. அதே…

Read More

பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் நிதியிலிருந்து 1 கி.மீ. நீளமான பாதை

அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ராஜாங்கன பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அலி வங்குவ கிராமத்தில் 1 கி.மீ. நீளமான பாதையினை புனர் நிர்மாணம் செய்வதற்கான வேலைகள் 2019.02.10 அன்று பாராளுமன்ற உறுப்பினர்  இஷாக் ரஹுமானினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

Read More

கிராமம் , நகரம் என்ற பேதமின்றி வளங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் ; வவுனியா தரணிக்குளத்தில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

கிராமம் , நகரம் என்ற பாகுபாடின்றி பாடசாலைகளுக்கு தேவையான சகல வளங்களும் சமமாக பங்கிடப்பட வேண்டுமென தெரிவித்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன் , பல குறைபாடுகளுக்கு மத்தியிலும் கிராமப்புற மாணவர்கள் கல்வியில் முன்னேறி வருகின்றமை மகிழ்ச்சியளிப்பதாக கூறினார். வவுனியா தரணிக்குளம் கணேஷ் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு விளையாட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் (08) கலந்து கொண்டார். பாடசாலையின் அதிபர் ஆர் லிங்கநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வவுனியா வடக்கு…

Read More

பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் நிதி ஒதுக்கீட்டில் நொச்சியாகம கந்துவெவ கிராம மக்களுக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது.

அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து நொச்சியாகம கந்துவெவ கிராம மக்களுக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது. குறித்த இயந்திரம் 2019.02.10 அன்று பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானினால் வைபக ரீதியாக மக்களிடம் கையளிக்கப்பட்டது. இந் நிகழ்வின்போது மேல்மாடி கட்டுமான வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கந்துவெவ முஸ்லிம் பள்ளிவாயலினையும் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் பார்வையிட்டதோடு கட்டிட அபிவிருத்திக்கும் ஓர் தொகை நிதியினை ஒதுக்கீடு செய்து பள்ளி கட்டிட வேலைகளை முடித்துத்தருவதாவும் பாராளுமன்ற…

Read More

புல்மோட்டை பிரதேசத்துக்கான தனித் தனியான பிரதேச செயலகம்,பிரதேச சபை உருவாக்கப்பட வேண்டும் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்!!!

அதிக சனத்தொகை செறிவுக்கு ஏற்பட்ட புல்மோட்டை பிரதேசத்துக்கான தனியான பிரதேச செயலகம், பிரதேச சபை என்பன உருவாக்கப்பட வேண்டும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சரூமான அப்துல்லா மஹரூம் தெரிவித்தார். புல்மோட்டை பகுதியில் பல புதிய அபிவிருத்தி திட்டங்களை திறந்து மக்கள் பாவனைக்கு இன்று (10) கையளித்து விட்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய பிரதியமைச்சர். துரித அபிவிருத்தியில் பல திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம் அபிவிருத்திகளுக்கு தடையற்ற…

Read More

குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராமங்களின் அபிவிருத்தி திட்டங்களின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்.

திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட புல்மோட்டை ,குச்சவெளி,நிலாவெளி ஆகிய பகுதிகளில் இன்று புதிய வீதிகள் மற்றும் வடிகான் வசதிகளை மக்கள் பாவனைக்காக திறந்து விடப்பட்டு கையளிக்கப்பட்டது. கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் கௌரவ அல்ஹாஜ் அப்துல்லா மஹ்ரூப் அவர்களின் ஏற்பாட்டில் இவ் அபிவிருத்தி நிகழ்வுகள் யாவும் இடம் பெற்றன. புல்மோட்டை மையவாடி கொங்ரீட் வீதி, ரஹ்மான் நகர் வடிகான், நாவலடி…

Read More

கிழக்கு மாகாண ஆளுநருக்கு நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் தாஹிர் நன்றி தெரிவிப்பு!!!

கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கும் அம்பாரை மாவட்டத்திலுள்ள 20 உள்ளூராட்சி சபைகளினதும் தவிசாளர்களுக்குமான சந்திப்பு ஒன்று அண்மையில் (18.01.2019) அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் இடம்பெற்றது. இதன்போது கலந்துகொண்ட நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர், முன்பள்ளி பாடசாலைகளை சபைகளின் அதிகாரத்தின் கீழ் முறைப்படுத்தி முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பள வசதிகளையும் சரிவர ஏற்படுத்திக் கொடுத்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை ஆளுனரிடம் முன்வைத்தார். அவற்றை உள்வாங்கிக் கொண்ட ஆளுனர் இன்று ; முன்பள்ளி…

Read More

அபிவிருத்திகளை துரிதப்படுத்த ஆலோசனைகளையும் ஒத்துழைப்புகளையும் வழங்குங்கள் ; முசலியில் அமைச்சர் ரிஷாட் கோரிக்கை !

பிரதேச மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து,உள்ளூர் அபிவிருத்திகளைத் துரிதப்படுத்தத் தேவையான ஆலோசனைகள்.ஒத்துழைப்புக்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்த அமைச்சர் ரிஷாத் பதியுதீன்,உள்ளூர் அரசியல்வாதிகள் வீணான விமர்சனங்களிலிருந்து விடுபட்டு மக்களின் தேவைகளில் கவனம் செலுத்த வேண்டுமென்றும் தெரிவித்தார். முசலி தேசிய  பாடசாலையில் மேற்கொள்ளப்பட்டிருந்த அபிவிருத்தி திட்டங்களின் அங்குரார்ப்பணம் மற்றும் இல்ல விளையாட்டு போட்டி என்பன நேற்று (09) இடம்பெற்ற போது  பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் மேலும் கூறியதாவது,  அரசியல் அதிகாரம் என்பது நிலையானது அல்ல. அதிகாரங்கள் இருக்கும் போதுதான் அபிவிருத்திகளையும்…

Read More