Headlines

“சிறுபான்மை சமூகம் நொந்து நூலாகி உள்ளது” முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா முன்னிலையில் அமைச்சர் றிஷாட் எடுத்துரைப்பு

இனவாதிகளின் வக்கிர புத்தியினாலும் துவேஷ நடவடிக்கையினானும் சிறுபான்மை சமூகம் நொந்து நூலாகி விட்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா முன்னிலையில் அமைச்சர் றிஷாட் எடுத்துரைத்தார். ஜனாதிபதி வேட்பாளர் சஜித்தை ஆதரித்து தர்ஹா நகரில் நேற்று மாலை (10) இடம்பெற்ற பரப்புரைக் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார் . களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவும் இங்கு பங்கேற்றிருந்தார். யுத்தம் ஓய்ந்ததன் பின்னர் இனவாதிகள் முஸ்லிம் சமூகத்தின் மீது தமது கைவரிசையை காட்டத் தொடங்கினர். சுமார் 10 வருடங்களாக தொடர்ந்த…

Read More

ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்தவர்கள் குறித்து விழிப்புடன் இருங்கள் களுத்துறை, பேருவளையில் அமைச்சர் றிஷாட் பதியுதீன்

கடந்த காலங்களில் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த அடக்குமுறையாளர்கள் குறித்து சிறுபான்மை சமூகம் விழிப்புடன் செயலாற்ற வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். களுத்துறை, பேருவளை, தர்கா நகர், அட்டுலுகம மற்றும் பாணந்துறை- தொட்டவத்தை ஆகிய பிரதேசங்களில் சஜித் பிரேமதாசாவை ஆதரித்து இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் அமைச்சர் உரையாற்றினார். இனவாதத்துக்கு தீனி போட்டு வளர்த்தவர்கள் தேர்தலில் வெல்லுவதற்காக நம் மீது பரிவு காட்டுகிறார்கள். அன்பை செரிகின்றனர். அரவணைக்கின்றனர். இந்த நடிகர்களின்…

Read More

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து வந்தாறுமூலை பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரகூட்டம்

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து வந்தாறுமூலை பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு மக்களுக்கு கருத்துரைகளை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர் அமுதினி, இணைப்பாளர் லோகநாதன், யோசுதாஸ், நாகேந்திரன் மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Read More

தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்காக வாக்குகளை பாழாக்காதீர்கள்- கல்முனையில் அமைச்சர் றிசாத்

இந்த நாட்டில் சிறுபான்மை தமிழ் பேசும் சமூகம் பாதுகாக்கப்பட வேண்டுமானால்  எதிர்வரும் 16 ஆம் திகதி இந்த நாட்டின் எட்டாவது ஜனாதிபதியாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை அதி கூடிய வாக்குகளால் இந்த பிரதேச மக்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டியது நமது கடமையாகும் என அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவினை ஆதரித்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும் முன்னாள்…

Read More

பொதுஜனபெரமுன ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் நிம்மதி சீர் குலையும்_பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப்

பொதுஜன பெரமுன கட்சி ஆட்சியமைக்குமாக இருந்தால் அது முஸ்லிம்களின் நிம்மதியை சீர்குலைத்து விடும் என துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார். புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாசவை ஆதரித்து கிண்ணியாவில் இன்று (10) இடம் பெற்ற மக்கள் கலந்துரையாடலின் போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றுகையில் மக்களது பிரச்சினைகளை நன்கு அறிந்த ஒருவராகவும் முஸ்லிம் சமூகத்தின் மதக் கடமைகள் உரிமைகளை பாதுகாக்கக்…

Read More