இனவாதிகளின் கொட்டத்தை அடக்க சஜித்தே சரியான தெரிவு. முல்லைத்தீவில் அமைச்சர் றிஷாட்!
இனவாதிகள் கூட்டுச் சேர்ந்துள்ள அணியை ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மை மக்கள் ஒட்டுமொத்தமாக நிராகரிக்கவேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் கோரிக்கைவிடுத்தார். சஜித் பிரேமதாசாவை ஆதரித்து இன்று காலை (04) முல்லைத்தீவில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றினார்.அவர் கூறியதாவது, சிறுபான்மை மக்களை “வந்தான் வரத்தான்” எனக் கருதும் இனவாதிகளுக்கு இந்த தேர்தலில் நாம் ஒன்றுபட்டு பாடம்புகட்டுவோம். நமது சமூகம் தன்மானத்துடனும், தலைகுனிவின்றியும் வாழவேண்டும் என்பதற்காகவே சஜித் பிரேமதாசவை ஆதரிக்கின்றோம். கடந்த ஒரு தசாப்தகாலமாக…
