Headlines

சிறந்த கல்விச் சமூகத்தை உருவாக்குவதன் மூலமே நாளைய தலைவர்களை எதிர்பார்க்கலாம்

நாட்டில் இருக்கின்ற கல்வித் திட்டங்களில் பல கொள்கைகள் காணப்பட்டாலும் கல்விக்கான அதிமான நிதியை ஒதுக்கீடு செய்து சிறந்த கல்விச் சமூகத்தை உருவாக்குவதன் மூலமே நாளைய தலைவர்களை எதிர்பார்க்கலாம் என துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார். குச்சவெளியில் நேற்று (09) திங்கட் கிழமை அந்நூரியா மகாவித்தியாலயத்தில் இடம் பெற்ற” அண்மையில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” எனும் தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் ஆசிரியர் விடுதிக்கான நிர்மாணிக்கப்பட்ட கட்டிடத்தை திறந்து வைத்து…

Read More

மன்/அடம்பன் மத்திய மஹா வித்தியாலயத்திற்கான 20 மில்லியன் பெறுமதியான இரண்டு மாடிக் கட்டிக் கட்டிடத்திற்க்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு!!!

மன் \ அடம்பன் மத்திய மஹா வித்தியாலயத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுத்தீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட உள்ள இரண்டு மாடிக் கட்டிடத்திற்கான அடிகல் நாட்டு நிகழ்வு இன்று(2019.09.10) பாடசாலையின் அதிபர் தலைமையில் நடைபெற்றது. அமைச்சரின் பிரத்தியோக செயலாளரும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். மேலும் சிறப்பு விருந்தினர்களாக மடு பிரதேச கல்விப் பணிப்பாளர், மாந்தை பிரதேச சபை தவிசாளர் சந்தியோகு…

Read More

வெளிமாகாணங்களில் நியமனம் பெற்ற கல்வியல் கல்லூரி ஆசிரிய ஆசிரியைகளை சொந்த மாவட்டங்களில் நியமிக்க பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அகிலவிராஜிடம் வேண்டுகோள்.

வெளி மாவட்டங்களுக்குள் வழங்கப்பட்ட கல்வியல் கல்லூரி ஆசிரிய நியமனங்களை தங்களுடைய சொந்த பிரதேசங்களுக்குள் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் கோரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் வழங்கப்பட்ட கல்வியல் கல்லூரி ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வெளிமாவட்டங்களுக்குள் வழங்கப்பட்டுள்ளது இது தொடர்பில் பிரதியமைச்சரிடத்தில் வெளிமாவட்டங்களில் நியமனக் கடிதங்களை பெற்ற ஆசிரிய  ஆசிரியைகள் தங்களை சொந்த மாவட்டங்களில் பணியாற்றுவதற்கான நடவடிக்கைகளை செய்து தருமாறு கோரியிருந்தனர் .இது தொடர்பில் கல்வி அமைச்சர் அகிலோஇராஜ் காரியவசமிடத்தில் இன்று (10) பிரதியமைச்சரினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விசேட…

Read More

பேசாலை பத்திமா ம.வி யின் அதிபர்விடுதி அமைச்சர் றிஷாட்டினால் திறந்துவைப்பு.

கல்வி அமைச்சின் “அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” தேசிய வேலைத்திட்டத்தின் ஊடாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மன்னார் பேசாலை பத்திமா மகா வித்தியாலயத்துக்கான அதிபர் விடுதி (09) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதினால் திறந்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பாடசாலையின் அதிபர் ஜி.மெரில் குரோஸ் மன்னார் பிரதேசபை தவிசாளர் முஜாஹிர் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான றிப்கான் பதியுதீன்,அலிகான் ஷரீப், மன்னார் பிரதேசபை உறுப்பினர் டிப்னா குரோஸ் வலயக்கல்விப்பணிப்பாளர் பிரட்லி உட்பட கல்வி அதிகாரிகளும் கலந்துகொண்டனர்….

Read More

நெல் உற்பத்தி வீழ்ச்சியடைந்ததால் அரிசி இறக்குமதிகளுக்கு அனுமதி!!!

தரம் பரீட்சிக்கப்பட்டு 109,000 மெ.தொ. தருவிப்பு நாட்டின் நிலவிய மோச மான காலநிலை காரணமாக நெல் உற்பத்தியில் ஏற்பட்ட தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டே அரிசி இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டது. தருவிக்கப்பட்ட அரிசி யாவும் உரிய அனுமதியைப் பெற்றே, நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்பட்டதாக வர்த்தக மற்றும் கைத்தொழில்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். சிறிய மற்றும் நடுத்தர அரிசியாலை உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரே ரணை மீதான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்….

Read More

5 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில்  மன்னார் மூர்வீதி கிராமத்திற்கு பாரிய அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்  

கைத்தொழில், வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான றிசாட் பதியுத்தீன் அவர்களின்   நிதி ஒதுக்கீட்டில்  மன்னார் நகர சபை எல்லைக்குற்பட்ட மூர்வீதி கிராமத்திற்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மன்னார் நகர சபை உறுப்பினர் உவைஸுல் கர்னி அவர்களது தலைமையில் இடம்பெற்றது 5 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் ஆரம்பிக்கப்பட்ட பாலர் பாடசாலை கட்டடம் , மையவாடிக்கான உள்ளக பாதை மற்றும் மின்…

Read More

வாகனேரி பகுதியில் சில அரசியல்வாதிகள் பூதாகரமான பிரச்சனையாக காட்ட முயல்கின்றனர்!!!

வாகனேரி பகுதியில் பாரிய பிரச்சனை ஏற்படவில்லை. ஆனால் சில அரசியல்வாதிகள் இதனை ஒரு பாரிய பூதாகரமான பிரச்சனையாக காட்ட முயல்வது என்பது கவலைக்குரிய விடயமாகும் என விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாகனேரி இத்தியடி விநாயகர் ஆலயத்தில் ஏற்பட்ட பாதீட்டின் காரணமாக தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடுகளை தீர்க்கும் வகையில் விநாயகர் ஆலயத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்த போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்…

Read More

விவசாய அமைச்சின் மூலம் விரைவில் இரண்டாயிரம் ஏக்கருக்கு கற்றாளை செய்கை செய்யப்பட உள்ளதாக -இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாய அமைச்சின் மூலம் விரைவில் இரண்டாயிரம் ஏக்கருக்கு கற்றாளை செய்கை செய்யப்பட உள்ளதாக விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஓட்டமாவடி கேணிநகர் பகுதியில் தையல் பயிற்சி நெறியை நிறைவு செய்த யுவதிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்வு கேணிநகர் கலாசார மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள…

Read More

இலங்கையின் தொழில்நுட்பக் கல்லூரிகள் இளைஞர்களுக்கு உலக சந்தையுடன் போட்டியிடக்கூடிய வகையில் திறன்களை வழங்குகிறது! – அமைச்சர் ரிஷாட்

‘இலங்கையின் தொழிற்பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுக்கு ஒரு சிறந்த தொழில்நுட்பக் கல்லூரியாக கம்பஹா தொழில்நுட்பக் கல்லூரி தனது பயணத்தினை ஆரம்பிக்கப் போகிறது. இது குறிப்பாக கம்பஹா மாவட்ட  .   இளைஞர்களுக்கான  சிறந்த  மையமாகவும் ஒரு திருப்புமுனையாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது’ என கைத்தொழில் மற்றும் வர்த்தகம், இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியமர்த்தல், கூட்டுறவு மேம்பாடு, திறன் மேம்பாடு மற்றும் தொழில் பயிற்சி அமைச்சரான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கடந்த வாரம் கம்பஹா தொழில்நுட்பக் கல்லூரி திறப்பு விழாவில் பிரதம…

Read More

பெரும்பான்மையினருடன் ஐக்கியத்துடன் வாழ கடும்போக்கர்கள் தடைபோடுகின்றனர். எருக்கலம்பிட்டியில் அமைச்சர் றிஷாட்.

பெரும்பான்மை மக்களுடன் ஐக்கியமாகவும் புரிந்துணர்வுடனும் சிறுபான்மை மக்கள் வாழவிழைந்த  போதும் கடும்போக்காளர்களும் காவியுடைதரித்த இனவாதிகளும் அதற்கு தொடர்ந்தும் தடைபோடுவதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். எருக்கலம்பிட்டி மகளிர் கல்லூரியின் வருடாந்த  பரிசளிப்பு நிகழ்வில் (01) பிரதம அதிதியாக அமைச்சர் கலந்துகொண்டார். கல்லூரி  அதிபர் எம்.அஸ்மி தலைமையில் இடம்பெற்ற  விழாவில் அமைச்சர் கூறியதாவது, அண்மைக்காலமாக சிறுபான்மை சமூகம் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துவருகின்றது.சமுதாயத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எங்களை போன்றவர்களுக்கும் சொல்லொணாத நெருக்கடிகளையும், துன்பங்களையும்  இனவாதிகள் தருகின்றனர் செய்யாத குற்றங்களுக்காக தண்டனை அனுபவிக்கின்ற…

Read More

வாகனேரி பகுதியில் பாரிய பிரச்சனை ஏற்படவில்லை. ஆனால் சில அரசியல்வாதிகள் இதனை ஒரு பாரிய பூதாகரமான பிரச்சனையாக காட்ட முயல்வது என்பது கவலைக்குரிய விடயமாகும் அமீர் அலி தெரிவித்தார்.

வாகனேரி பகுதியில் பாரிய பிரச்சனை ஏற்படவில்லை. ஆனால் சில அரசியல்வாதிகள் இதனை ஒரு பாரிய பூதாகரமான பிரச்சனையாக காட்ட முயல்வது என்பது கவலைக்குரிய விடயமாகும் என விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாகனேரி ஜப்பார்ரி திடல் பகுதியில் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடுகளை தீர்க்கும் வகையில் அப்பகுதிக்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்த போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு…

Read More

அஹங்கமை ஆர்ப்பாட்டம்… அப்துல்லாஹ் மஹ்ரூப் கண்டனம்!

மாத்தறை அஹங்கமையில்   அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஆர்ப்பாட்டத்தின் மூலம் இனவாதிகள் தமது   மற்றுமொரு குரூர   முகத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும் இதனை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வெகுவாக  கண்டிப்பதாகவும் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பிரதி  அமைச்சருமான்    அப்துல்லாஹ்  மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.  அவர் வெளியிட்டுள்ள கண்டனஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முஸ்லீம் சமூகத்தின் குரலை எப்படியாவது அடக்கி விட வேண்டும் என்று முயற்சித்து வரும் கடும் போக்கர்கள், இன்று மீண்டும் ஒரு இனவாத நாடகத்தை…

Read More