“சிறுபான்மை மக்கள் மனக்கிலேசம் கொள்ளவேண்டியதில்லை” வவுனியாவில் அமைச்சர் றிஷாட்-
சிறுபான்மை மக்களையும் அரவணைத்து செல்கின்ற,நல்ல ஒரு தலைவரை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளில் சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் ஒருமித்து உழைத்துவருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா மாங்குளம் ஹாமிய மகா வித்தியாலயத்தில் ஆரம்பப்பிரிவு கற்றல்வள நிலைய திறப்புவிழாவில் (20) பிரதம விருந்தினராக அவர் கலந்துகொண்டார் பாடசாலை அதிபர் எஸ்.நிசார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய அவர் கூறியதாவது, தேசிய ரீதியில் பல்வேறு சவால்களுக்கு நாடு முகம்கொடுக்கும் இந்த நெருக்கடியான அரசியல்…
