பெரும்பான்மையினருடன் ஐக்கியத்துடன் வாழ கடும்போக்கர்கள் தடைபோடுகின்றனர். எருக்கலம்பிட்டியில் அமைச்சர் றிஷாட்.
பெரும்பான்மை மக்களுடன் ஐக்கியமாகவும் புரிந்துணர்வுடனும் சிறுபான்மை மக்கள் வாழவிழைந்த போதும் கடும்போக்காளர்களும் காவியுடைதரித்த இனவாதிகளும் அதற்கு தொடர்ந்தும் தடைபோடுவதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். எருக்கலம்பிட்டி மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வில் (01) பிரதம அதிதியாக அமைச்சர் கலந்துகொண்டார். கல்லூரி அதிபர் எம்.அஸ்மி தலைமையில் இடம்பெற்ற விழாவில் அமைச்சர் கூறியதாவது, அண்மைக்காலமாக சிறுபான்மை சமூகம் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துவருகின்றது.சமுதாயத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எங்களை போன்றவர்களுக்கும் சொல்லொணாத நெருக்கடிகளையும், துன்பங்களையும் இனவாதிகள் தருகின்றனர் செய்யாத குற்றங்களுக்காக தண்டனை அனுபவிக்கின்ற…
