Headlines

“தியாகப்பெருநாளின் மகத்துவத்தை உணர்ந்து செயற்படுவோம்” அமைச்சர் றிஷாட் பதியுதீன் வாழ்த்துச் செய்தி

தியாகம் பொறுமையின் பெறுமானங்களாகக் கிடைத்த புனித ஹஜ்ஜுப் பெருநாளின் மகத்துவத்தை உணர்ந்து முஸ்லிம்கள் நடந்து கொள்ள வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத்பதியுதீன் தெரிவித்துள்ளார். புனித ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் தெரிவித்துள்ளதாவது… : மிகச் சோதனைமிக்க காலத்தில் முஸ்லிம்களாகிய நாம் தியாகத் திருநாளைக் கொண்டாடுகிறோம். இறைதூதர் இப்றாஹிம் நபியின் முன்னுதாரணங்கள் யாவும் இறைவனைத் திருப்திப்படுத்துவதாகவே இருந்தது.அல்லாஹ்வின் கட்டளைக்காக தனது மகனையே அறுத்துப் பலியிடத் துணிந்த இப்றாஹிம் நபியின் இறை…

Read More

கொழும்பு புறக்கோட்டை வர்த்தக பெருவிழாவை அமைச்சர் ரிஷாட் அங்குரார்ப்பணம்

கைத்தொழில், வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சு மற்றும் கொழும்பு வர்த்தக சங்கம் ஆகியன இணைந்து கொழும்பு புறக்கோட்டையில் ஏற்பாடு செய்துள்ள வர்த்த பெருவிழாவின் அங்குரார்ப்பண நிகழ்வை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று காலை ஆரம்பித்து வைத்தார். சிறிய மற்றும் நடுத்தர வியாபாரிகளை ஊக்குவித்து அண்மைக்கால சம்பவங்களினால் வர்த்தக நடவடிக்கையில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவை நிவர்த்திக்கும் வகையில் இன்றும் நாளையும் ஏற்பாடு…

Read More

மன்னார் பிரதேசபைக்குட்பட்ட கிராமங்களின் வீதிப்புனரமைப்பு வேலைகள் ஆரம்பம்.

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் பிரதேசபை எல்லைக்குட்பட்ட புதுக்குடியிருப்பு,பேசாலை மற்றும் சிறுதோப்பு கிராமங்களின் வீதிப்புனரமைப்பு வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.. இந்த நிகழ்வில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும் அமைச்சரின் பிரத்தியோக செயலருமான றிப்கான் பதியுதீன் மன்னார் பிரதேசபை தவிசாளர் முஜாஹிர் மற்றும் மன்னார் மாவட்ட இளைஞ்சர் விகாரபொறுப்பாளர் முனவ்பர் பிரதேசபை உறுப்பினர்கள் கட்சி முக்கியஸ்தர்கள் ஊர்மக்களும் கலந்துகொண்டார்…

Read More

“அடிப்படைவாதத்தைப் பரப்பும் மார்க்கமாக இஸ்லாம் ? : சபையில் கர்ச்சித்தார் அப்துல்லாஹ் !!

அடிப்படைவாதத்தைப் பரப்பும் மார்க்கமாக இஸ்லாத்தை காண்பிப்பதற்கு சிலர் முயற்சிப்பதாக இராஜாங்க அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் இன்று பாராளுமன்றில் குற்றஞ்சாட்டினார். அத்துடன் ஏற்றுமதி, இறக்குமதியில் நாங்கள் வெளிநாடுகளின் மூலப்பொருட்களில் தங்கியிருக்கின்றோம். எரிபொருள் இறக்குமதி செய்யப்படுவது அரபு நாடுகளில் இருந்தாகும்.அதேபோல் இங்கிருந்து அதுகமான பொருட்களை ஏற்றுமதி செய்வதும் அரபு நாடுகளுக்காகும். ஆனால் ஏற்றுமதியை ஊக்குவிக்க நேரடி பங்களிப்புச் செய்யும் அரபு நாடுகள் தொடர்பாக அண்மைக்காலமாக  முன்வைக்கப்படும் தவறான கருத்துக்கள் நிவர்த்தி செய்யப்படவேண்டும். மேலும் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்துக்கான முறையான அனுமதியைப் பெற்று…

Read More

வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் 240வது மாதிரி கிராமம் அங்குரார்ப்பண நிகழ்வு!!!

வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களது திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்ட தோட்டவெளி கிராமத்திற்கான புதிய மாதிரிக்கிராமம் உத்தியோக பூர்வமாக மக்களுக்கு கையளிக்கப்பட்டது இன்று நடைபெற்ற ஜோசப் நகர் , ஜோசப்வாஸ் நகர் மாதிரிக்கிராமத்தினை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் சிறப்பு விருந்தினராகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களது பிரதிநிதியாகவும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினரும் கைத்தொழில் வர்த்தகம் நீண்டநாள் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் கூட்டுறவு அபிவிருத்தி திறன் அபிவிருத்தி தொழில் பயிற்சி அமைச்சர் ரிஷாட்…

Read More

இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கொழும்பு பிரதேச மக்களுக்கு முன்னாள் மேல்மாகாணசபை உறுப்பினர் பாயிஸினால் உதவிகள்.

இன்று நள்ளிரவு திடீரென கொழும்பு பகுதியில் வீசிய கடுமையான புயல் காற்றின் காரணமாக அப்பகுதியிலுள்ள பல வீடுகளுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளது அந்த இடத்திற்கு விஜயம் மேற்கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கொழும்பு மாவட்ட அமைபாளரும் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் கௌரவ பாயிஸ் அவர்களின் சொந்த நிதியில் பாதிக்கப்பட்ட வீட்டு மக்களுக்கு சீட் வழங்கி வைத்தார்.

Read More

கல்முனை பிரதேச செயலக விவகாரம்; அமைச்சர் றிஷாட்டை ஹரீஸ் எம்.பி  மற்றும் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சந்தித்து பேச்சு!

கல்முனை பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனை பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ், கல்முனை ஜூம்ஆ பள்ளிவாசல்,வர்த்தக சங்கம் மற்றும் சிவில் அமைப்புக்களின்  பிரதிநிதிகள்   சந்தித்து பேசினர். நேற்று இரவு (05) கொழும்பில் நடந்த இந்த சந்திப்பில் கல்முனை ஜூம்ஆ பள்ளி தலைவர் டாக்டர் அஸீஸ் , வர்த்தக சங்க தலைவர் சித்தீக் ஹாஜியார்,ஆகியோர் உட்பட கல்முனை முக்கியஸ்தர்களும்  கலந்து கொண்டனர்.இந்த சந்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின்…

Read More

சிறுபான்மை சமூகத்தினர் அதிகபடியான வாக்குகளை அளித்தால் தான் நாங்கள் எதிர்பார்க்கும் ஜனாதிபதியை பெற்றுக் கொள்ள முடியும் என இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி

சிறுபான்மை சமூகத்தினர் அதிகபடியான வாக்குகளை அளித்தால் தான் நாங்கள் எதிர்பார்க்கும் ஜனாதிபதியை பெற்றுக் கொள்ள முடியும் என இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கும்புறுமூலையில் இந்திய நிதி உதவி மூலம் அமைக்கப்பட்ட காந்தி மாதிரிக் கிராமம் மற்றும் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் அல்மஜ்மா நகரில் அமைக்கப்பட்ட முகைதீன் அப்துல் காதர் மாதிரிக் கிராமம் என்பன மக்களிடம் சனிக்கிழமை கையளிக்கப்பட்டது. கல்குடாப் பிரதேசத்தில் மக்களிடம் கையளிக்கப்பட்ட வீட்டுத் திட்டத்திற்கான பிரதான…

Read More

பட்டதாரி பயிலுனர் நியமனத்தில் திருகோணமலைக்கு வெளியில் நியமனம் பெற்றவர்களுக்கு சொந்த மாவட்டத்தில் பணியாற்ற உத்தரவு

திருகோணமலை மாவட்டத்தில் பட்டதாரி பயிலுனர்களாக நியமனம் பெற்ற அனைவரையும் தங்களது சொந்த மாவட்டத்தில் கடமைகளை பொறுப்பேற்று பணியாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார். திருகோணமலையில் அண்மையில் நியமனம் பெற்ற 193 பட்டதாரி பயிலுனர்களில்  நியமனத்தின் போது பலர் திருகோணமலை மாவட்டத்திற்கு வெளியில் உள்ள திணைக்களங்களில்  தங்களது கடமைகளை பொறுப்பேம்குமாறு கடிதங்கள் மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது இது விடயமாக பட்டதாரி பயிலுனர்களாக நியமனம் பெற்றவர்கள் பிரதியமைச்சரின் கவனத்திற்கு தங்களது சொந்த மாவட்டத்தில் பணியாற்றுவதற்கு நடவடிக்கைகளை பெற்றுத்…

Read More

தி/ஸாகிரா கல்லூரிக்கு அமைச்சர் றிசாத் விஜயம்

திருகோணமலை சாஹிரா கல்லூரிக்கு பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்களின் அழைப்பின் பேரில் விஜயம் செய்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் அங்குள்ள குறைபாடுகள் தொடர்பில் பாடசாலை அதிபரிடம் கேட்டறிந்து கொண்டார். பாடசாலை அதிபர் அலி சப்ரி தலைமையில் வெள்ளிக் கிழமை (02) குறித்த விஜயம் மேற்கொள்ளப்பட்டு பாடசாலை வளப்பற்றாக்குறைகள் தொடர்பாகவும் இதன் போது பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதில் பாடசாலை நிருவாக உத்திதோகத்தர்கள்,ஆசிரியர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டார்கள்

Read More

” ஜம்இய்யத்துல் உலமாவின் ஆலோசனைகளை தவிர்த்து முஸ்லிம் எம்.பிக்கள் என்றுமே செயலாற்றியதில்லை” தெஹிவளை ஜும்ஆ பள்ளி நிகழ்வில் அமைச்சர் ரிஷாட்

முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை தீர்ப்பது  தொடர்பில் ஜம்இய்யத்துல் உலமாவின் ஆலோசனை மற்றும் கலந்துரையாடல்களின்றி எத்தகைய முடிவுகளையும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை மேற்கொண்டதில்லையென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கொழும்பு மற்றும் கண்டி மாவட்ட பள்ளிவாசல்களின் சம்மேளனங்கள் இணைந்து தெஹிவளை ஜும் ஆ பள்ளிவாசலில் நேற்று (04)  நடாத்திய விசேட மாநாட்டில் உரையாற்றிய போது அமைச்சர் மேலும் கூறியதாவது, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்ட அச்சம்,மன உளைச்சல்கள்  மற்றும் பாதிப்புக்கள் குறித்து முன்னாள் அமைச்சர்…

Read More

உயர்தரப் பரீட்சையை வெற்றி கொள்ள இறைவனை பிரார்த்திக்கிறேன்

தற்போது ஆரம்பமாகியிருக்கும் கா.பொ.தா.சா.தர உயர்தரப்பரீட்சையில் சகல மாணவர்களும் வெற்றிகொள்ள வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன் என துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார். உயர்தரபரீட்சை எழுதும் மாணவர்களுக்கு இன்று (05)விடூத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது தொடர்ந்தும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது மாணவச் சமூகம் உயர்தரபரீட்சையின் பின்பு சிறந்த பெறுபேறுகளை பெற வேண்டும் பல துறைகளிலும் சாதித்து நாட்டில் வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்ய வேண்டும் இவ்வாறான கட்டங்களை எதிர்காலத்தில் தாண்டி சிறந்த…

Read More