கல்வியல் கல்லூரி ஆசிரியர்களாக நியமனம் பெறுவோர் சொந்த மாவட்டத்தில் பணியாற்ற நடவடிக்கை!!!
கல்வியல் கல்லூரிகளில் இருந்து புதிதாக ஆசிரியர் நியமனங்களைப் பெற்று வெளியேறும் ஆசிரியர்களுக்கு தங்களது சொந்த மாவட்டத்தில் கடமையாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார். கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலகத்தில் நேற்று (19) இடம் பெற்ற சந்திப்பின் போதே இக்கோரிக்கையை பிரதியமைச்சர் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜீ.முதுபண்டாவிடம் முன்வைத்துள்ளார். இவ் பிரச்சினைக்கான தீர்வாக உடன் அமுலுக்கு வரும் வகையில் ஆசிரியர் பற்றாக்குறையினை கருத்திற் கொண்டு திருகோணமலை மாவட்ட கல்வியற் கல்லூரி ஆசிரியர்களை சொந்த…
