20 இலட்சம் ரூபா செலவில் ஹமீதியா பொது விளையாட்டு மைதானத்துக்கான பார்வையாளர் அரங்குக்கான அடிக்கல்நாட்டும் நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் கலந்துகொண்டார்.
திருகோணமலை மாவட்டம் தம்பலகாம பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை ஹமீதியா விளையாட்டு மைதானத்தின் பார்வையாளர் அரங்குக்கான கட்டிட நிர்மாணத்திற்கான அடிக்கல் நடும் அங்குரார்ப்பண வைபவம் இடம் பெற்றது குறித்த நிகழ்வானது இன்று(17) துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்களால் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது வர்த்தக வாணிப கைத்தொழில் ,நீண்டகாலம் இடம் பெயர்ந்தோரை மீளக்குடியேற்றல்,திறன் அபிவிருத்தி,கூட்டுறவுத் துறை அமைச்சின் கீழ் இயங்கும் மீள்குடியேற்ற திட்ட செயலணியின் ஊடாக சுமார் 20 இலட்சம் ரூபா…
